உள்நாட்டு செய்திகள்

விவாதங்களில் பங்கேற்காதோர் பட்டியலில் முஸ்லிம் எம்.பிக்கள் இல்லை

Written by Administrator

கடந்த வருடம் பாராளுமன்ற விவாதங்கள் எதிலுமே கலந்து கொள்ளாமல் வாய்மூடியிருந்த பாராளுமன்ற றுப்பினர்களின் பட்டியலை manthri.lk இணையத்தளம் வெளியிட்டுள்ளது. 13 பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு வாய்மூடி இருந்ததாக இந்த இணையத்தளம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இவர்களில் 12 பேர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்தவர்களாவர்.

கடந்த வருடம் ஜனவரி முதல் டிசம்பர் வரையான காலப்பிரிவுக்குட்பட்ட ஹன்சார்ட் அறிக்கைகளே வைத்தே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் கலாநிதி சரத் அமுனுகம (தேசியப் பட்டியல்), லக்ஷ்மன் வசந்த பெரேரா (மாத்தளை), ஜனக பண்டார (மாத்தளை), சிரிபால கம்லத் (பொலன்னறுவை), துலிப் விஜேசேகர (கம்பஹா), இந்திக பண்டாரநாயக்க (குருநாகல), தாராநாத் பஸ்நாயக்க (குருநாகல), அங்கஜன் ராமநாதன் (தேசியப் பட்டியல்), லொஹான் ரத்வத்த (கண்டி), ஆறுமுகம் தொண்டமான் (நுவரெலியா), லக்ஷ்மன் செனவிரத்ன (பதுளை), தேனுக விதானகமகே (பதுளை), வசந்த சேனாநாயக்க (ஐ.தே.க. – பொலன்னறுவை) ஆகியோர் அடங்குகின்றனர்.

About the author

Administrator

Leave a Comment