உள்நாட்டு செய்திகள்

குற்றவாளிகளின் அரசாங்கம் தண்டனை வழங்காது

Written by Administrator

இலங்கையில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடி சம்பவமான மத்திய வங்கி பிணை முறி விவகாரம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஆணைக்குழு ஊடாக அதன் குற்றவாளிகள் யாரென நாட்டுக்குத் தெரியப்படுத்தியுள்ள நிலையில், அவர்களது அரசாங்கம் இருக்கும் வரை குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க முடியாதென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பல உயிர்களைக் காவு கொண்டுள்ள கொலன்னாவ குப்பை மேட்டை விட அதிகமான குப்பையை மத்திய வங்கி பிணைமுறி ஊடாக அரசாங்கம் தம்மீது போட்டுக்​ கொண்டுள்ளதென ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

தேசிய கணக்காளர் அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்​வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஒரு தரப்பினர் நேர்மையுடன் சேவையாற்றும் போது மற்றுமொரு தரப்பினர் திருடுவது துயரமான சம்பவம் என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி, மோசடி செய்யும் அரசியல்வாதிகளை தவிர்த்து இந்த நாட்டின் அரச வருமானம் இழக்கப்படும் நிறுவனங்கள் தொடர்பில் எவரும் பேச முன்வராமை கவலையளிப்பதாகவும்  தெரிவித்துள்ளார்.

About the author

Administrator

Leave a Comment