உலக செய்திகள்

சிரிய ஜனாதிபதி ஈரானில்

Written by Administrator

சிரிய ஜனாதிபதி பஷ்ஷார் அல் அஸத் ஈரானிய ஜனாதிபதி ரூஹானி மற்றம் கொமைனி ஆகியோரை கடந்த வாரம் அதிரடியாகச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சிரியாவில் சிவில் யுத்தம் மூண்ட தற்குப் பின்னர் ஜனாதிபதி பஷ்ஷார் அல் அஸத் ஈரானுக்கு மேற்கொண்ட முதல் விஜயம் இதுவாகும் என சிரியாவின் அரச ஊடகங்கள்  தெரிவிக்கின்றன.

எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் சிரியாவில் போர் வெடித் ததைத் தொடர்ந்து அஸத் மேற்கொண்ட முதல் விஜயத்தில் ஈரானின் முக்கிய அதிகாரிகள் பலரை சந்தித்து உரையாடியுள்ளார்.

சிரியாவினதும் ஈரானினதும் நலன்களைக் காப்பதற்கு இரு நாடுகளும் தொடர்ச்சியாக ஒத்துழைத்துச் செயலாற்றும் என்று அலி கொமைனியும் ஹஸன் ரூஹானியும் வாக்களித்துள்ளதாக சிரிய ஊடகம் தெரிவித்துள்ளது,

சிரியாவில் சுன்னி முஸ்லிம்களுக்கு எதிரான யுத்தத்தில் பல பில்லியன் டொலர் ஆயுதங்களையும் படைப் பலத் தையும் ஈரான் அரசு வழங்கி வருகின்றமை பிராந்தியத்தில் கடும் பதட்டைத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளை, லெபனானில் செயல்படும் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லாஹ்வும் அஸதின் அரச படைகளோடு இணைந்து சுன்னி முஸ் லிம்களுக்கு எதிராகப் போராடி வருகின்றது. முஸ்லிம்கள் வெளியெறிச் செல்லும் பிராந்தியங்களில் ஈரானியர்கள் குடியமர்த்தப்படுவது பிராந்தியத்தில் கடும் விமர்சனத்தை எழுப்பியுள்ளது.

About the author

Administrator

Leave a Comment