உள்நாட்டு செய்திகள்

O/L பரீட்சை அடையாள அட்டை 31 க்கு முன் விண்ணப்பிக்க கோரிக்கை

Written by Administrator

இம்முறை கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் இம்மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் தேசிய அடையாள அடட்டைக்காக விண்ணப்பிக்குமாறு ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக வேண்டுகோள் விடுத்துள்ளார். பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு உரிய காலத்தில் அடையாள அட்டை வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் செயன்முறைப் பரீட்சைகள் முன்கூட்டியே நடத்தப்படுவதால் தேசிய அடையாள அட்டையை முன்னதாகவே பெற்றுக் கொள்வதற்கு மாணவர்களுக்கு இது வசதியாக அமையும். சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் மட்டுமன்றி தற்பொழுது 15 வயதிலிருந்தே அடையாள அட்டை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அடையாள அட்டைக்கான புகைப்படத்தை திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட நிலையங்களில் இருந்து பெற்று இணையத்தளம் ஊடாக அடையாள அட்டைக்காக விண்ணப்பிக்க முடியும்.

About the author

Administrator

Leave a Comment