உலக செய்திகள்

உய்குர் முஸ்லிம்களை சீனா நடத்தும் விதம் குறித்து ஐ.நா.வில் விவாதம்

Written by Administrator

சிங்கியாங் மாகாணத்தில் உய்குர் மற்றும் ஏனைய முயஸ்லிம்களை ஒதுக்கி வரும் சீனாவின் நடவடிக்கை குறித்து துருக்கியும் பிரிட்டனனும் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் கேள்வியெழுப்பியுள்ளன. துருக்கியின் வெளிவிவகார அமைச்சர் மௌலூத் கவசுகுலு, முஸ்லிம்களின் மதச் சுதந்திரத்தையும் கலாச்சாரத் தனித்துவத்தையும் பாதுகாப்பதற்கு சீனா முன்வர வேண்டும் என்று கோரியுள்ளார்.

பாதுகாப்புச் சபை தனது வருடாந்த அமர்வை ஆரம்பித்தபோது ராஜதந்திரிகளும் செயற்பாட்டாளர்களும் சிங்கியாங் பிராந்தியத்தில் சீனா கடைப்பிடித்து வரும் கொள்கைகள், மனித உரிமைகளை மீறுவதாக விவாதத்தை ஆரம்பித்தனர். இம்மாகாணமே சீனாவில் மிகப் பின்தங்கியதாகும். இஸ்லாமிய ஒத்துழைப்பு நாடுகளின் அமையத்தைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர்கள் சீனாவின் செயல்பாடுகள் குறித்து விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலுவாக முன்வைத்துள்ளன.

ஒரு மில்லியன் மக்களை சீன அரசாங்கம் தடுப்பு முகாம்களில் அடைத்து வைத்திருப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை சீன அரசாங்கம் தொடர்ச்சியாக மறுத்து வருகின்றது. ஆனால், சீனாவின் அரச கொள்கை உய்குர் முஸ்லிம்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாக முஸ்லிம் நாடுகள் பாதுகாப்புச் சபையில் குற்றம் சாட்டியுள்ளன.

About the author

Administrator

Leave a Comment