உலக செய்திகள்

நியூசிலாந்து மஸ்ஜித்கள் மீதான தீவிரவாத தாக்குதல் தொடர்பில் இலங்கை ஊடகவியலாளரின் நேரலை

Written by Administrator

நியூசிலாந்தில் வசிக்கும் இலங்கை ஊடகவியலாளர் சர்தாரின் நேரலை கீழே இணைக்கப்பட்டுள்ளது

நியூசிலாந்து நாட்டில் பள்ளிவாயலில் தொழுதுக் கொண்டிருந்த முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 49 நபர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்!

ஜூம்ஆ தொழுகைக்கு பிறகு நியூசிலாந்து உள்ள இரு மஸ்ஜித்களில் 10-15 நிமிடங்கள் வரை துப்பாக்கி சூட்டை கிறித்துவ தீவிரவாதிகள் நடத்தியுள்ளனர். டீன்ஸ் அவெ நகரில் இருக்கும் மஸ்ஜித் அல் நூர் மற்றும் லின்வூட் அவெ நகரில் இருக்கும் லின்வூட் மஸ்ஜித் ஆகிய இரு மஸ்ஜித்களிலும் துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளனர்.

மஸ்ஜித் அல் நூரில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தீவிரவாதி ப்ரெண்டன் டர்ரன்ட் (Brenton Tarrant) நடத்திய துப்பாக்கிச் சூட்டை ட்விட்டரில் நேரடியாக பதிவாக்கி இருக்கின்றார். தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக முன்பு நடத்தப்பட்ட தாக்குதல்களின் பெயர்களை கிறுக்கி வைத்துள்ளனர்.

இந்த தாக்குதல் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் ஒரு பெண் உட்பட நான்கு தீவிரவாதிகளை நியூசிலாந்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களின் காரில் வெடி மருந்துகள் மற்றும் ஆயுதங்கள் இருந்ததை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

மேலும் ஸ்ட்ரிக்லாண்ட் (Strcikland) வீதியில் வெடிகுண்டுகளுடன் கார் ஒன்றை கைப்பற்றியுள்ளனர். இது குறித்து கமிஷ்னர் புஸ் “எண்ணற்ற IED ரகங்கள் காரில் இருந்துள்ளது. அவைகளை இராணுவ வீரர்கள் செயலிழக்க செய்துள்ளனர்” என்ற குறிப்பிட்டுள்ளார்.

மஸ்ஜித் உள் கட்டிடம் இரத்த மயமாக காட்சியளிக்கிறது. நேரடி சாட்சிகளின் வாக்குமூலத்தில் “மஸ்ஜித் உள்ளே 5 வயது குழந்தையும் பலியாகியுள்ளது” என்றார்.

– ரஃபியூல் ஆஸிக்

About the author

Administrator

Leave a Comment