உலக செய்திகள்

ஐக்கிய இராச்சியத்தின் பயங்கரவாதப் பட்டியலில் ஹிஸ்புல்லாஹ் இயக்கம்

Written by Administrator

அரசாங்கத்திலும் பாராளுமன்றத்திலும் ஹிஸ்புல்லாஹ் ஆற்றி வரும் பங்களிப்புக்கு அப்பால் பிரிட்டனின் பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் அவ்வியக்கத்தைச் சேர்க்கப் போவதாக ஐக்கிய இராச்சியம் தெரிவித்துள்ளது. தொடக்கத்தில் ஹிஸ்புல்லாஹ் ஆயுத இயக்கத்தின் அரசியல் பிரிவு மீதே இத்தடை அமுலுக்கு வருவதாக பிரிட்டன் அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஹஸன் நஸ்ருல்லாஹ்வைத் தலைவராகக் கொண்ட ஈரானிய ஆதரவு இயக்கத்தின் எந்தவொரு ஆதரவாளர் மீதும் 22-02-2019 முதல் பிரிட்டனின் ஆள்புலத்தில் இச்சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஹிஸ்புல்லாஹ் இயக்கத்தோடு தொடர்பான எந்தவொரு நபரும் ஐக்கிய இராச்சியத்தில் பத்தாண்டு சிறைத்தண்டனையை எதிர்கொள்வ தற்கு இச்சட்டம் வகைசெய்துள்ளது.

மத்திய கிழக்கில் ஆபத்தான அரசியல் சூழலை உருவாக்குவதற்கும் பிராந்தியத்தின் ஸ்திரப்பாட்டைக் குலைப்பதற்கும் ஹிஸ்புல்லாஹ் இயக்கம் தொடர்ந்தும் முயற்சிக்கின் றது. இதனால், ஆயுதப் படைக்கும் அரசியல் பிரிவுக்கும் இடையில் நாம் எந்த வேறுபாட்டையும் காணவில்லை என பிரிட்டனின் உள்விவகார செயலாளர் சாஜித் ஜாவித் தெரிவித்துள்ளார்.

2008 இல் பிரிட்டனில் ஹிஸ்புல்லாஹ்வின் ஆயுதக் குழு தடைசெய்யப்பட்டமை குறிப்பிடத் தக்கது. இஸ்ரேல் பிரிட்டனின் இந்த முயற்சியைப் பாராட்டியுள்ளது. சிரியாவிலும் ஹிஸ்புல்லாஹ்  அரச படையுடன் சேர்ந்து செயல்பட்டு வருகின் றமை குறிப்பிடத்தக்கது.

About the author

Administrator

Leave a Comment