Features சமூகம்

உத்தேச ஹஜ் உம்ரா யாத்திரைச் சட்டம்

Written by Administrator

(ஹஜ் உம்ரா பயணங்களை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டமொன்றை இயற்றுவதற்காக, முஸ்லிம் சமய விவகாரங்கள் அமைச்சு பொதுமக்களிடம் இருந்து கருத்துக்களைக் கோரியிருந்தது. இது தொடர்பில் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவை ஒரு நகல் சட்டத்தைத் தயாரித்து அமைச்சிடம் கையளித்தது. அதிலிருந்து    சில விடயங்கள் தொகுக்கப்பட்டு இங்கு வழங்கப்பட்டுள்ளன)

கமிட்டி

இலங்கை ஹஜ் மற்றும் உம்ரா  கமிட்டி என்ற பெயரிலான கமிட்டி  ஒன்று முஸ்லிம் சமய கலாச்சார அலு வல்கள் அமைச்சரினால் வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கப்பட்டு நிய மிக்கப்பட வேண்டும். இந்தக் கமிட்டி யானது அசையும் அசையாச் சொத்துக் களை வாங்கவும், விற்கவும், நம்பிக்கை நிதியமொன்றை தாபிக்கவும், ஒப்பந்தங் களில் ஈடுபடவும், வழக்குத் தொடரவும் தொடரப்படவும் சட்டத்தால் இயலு மாக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும். கமிட்டியின் தலைமை அலுவலகம் முஸ்லிம் சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தில் இயங்க வேண்டும்.  பிராந்திய அலுவலகங்கள் உருவாக்கத் தேவைப்படுமிடத்து, குறித்த மாகாணத் தின் முதலமைச்சரின் அனுமதியுடன் உருவாக்கிக்  கொள்ள முடியும்.

கமிட்டியின் அங்கத்தவர்கள்

கமிட்டியின் அங்கத்தவர்களாக பின் வருவோர் அமைய முடியும்;

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல் கள் திணைக்களத்தின் பணிப்பாளர்  பதவி வழியாக

சபாநாயகரினால் நியமிக்கத்தக்கதான முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பின ரொருவர் பதவி வழியாக. பாராளுமன்ற உறுப்புரிமை இழக்கப்படும் போது கமிட்டியில் இவரது அங்கத்துவம் இழக்கப்படுவதாக அமைய வேண்டும்.

ஹஜ் மற்றும் உம்ரா பயண முகவர்கள் சங்கத்தினால் (Haj and Umra Travel Operations Association) நியமிக்கப்படும் இருவர்.

பின்வரும் வகையினரில் இருந்து அமைச்சரால் நியமிக்கப்படும் 07 பேர்

a)          பொது நிர்வாகம், நிதி, கல்வி, கலாச்சாரம் மற்றும் சமூகப் பணிகளில்   சிறந்த அறிவுள்ள 03 பேர். இவர்களில் ஒருவர் பெண்ணாக இருத்தல் வேண்டும்.

b)     மார்க்க அறிவிலும் சட்டத்திலும் சிறந்த அறிவுள்ளவர்கள் இருவர்

c) வைத்தியர்கள் இருவர். இவர் களில் ஒருவர் பெண்ணாக இருத்தல் வேண்டும்.

இவ்வாறு கமிட்டிக்கான 11 பேரும் தெரிவு செய்யப்பட்டதும், வர்த்தமானியூடாக அமைச்சர் இவர்களை நியமனம் செய்ய வேண்டும். இந்தக் கமிட்டிக்கான பதவிக் காலம் இவ்வாறு வர்த்தமானி அறிவித்தல் மூலம் நியமிக்கப்பட்ட திகதியிலிருந்து மூன்று வருடங்களாக அமைதல் வேண்டும். அங்கத்தவர்களின் தவணைக் காலம் அமைச்சர் வர்த்தமானி அறிவித்தலில் அறிவிப்பதனூடாக மேலும் ஆறு மாதங்களுக்கோ அல்லது ஒரு வருடத்துக்குக் குறையாத காலத் துக்கோ நீடிக்கப்பட முடியும். நியமிக் கப்பட்டு 45 நாட்களுக்குள் அமைச்சர் முதலாவது கூட்டத்தைக் கூட்டி தலைவரை நியமிக்க வேண்டும். கமிட்டியின் அங்கத்தவர்கள் அனைவரும் அரசாங்க ஊழியர்களாகக் கருதப்பட வேண்டும்.

கமிட்டியின் பணிகள்

1. யாத்திரிகள் சவூதி அரேபியாவில் தங்கி இருக்கும் காலங்களில் அவர்களது நலன் பேணுதல் தொடர்பிலும் வீசா விவகாரங்கள் தொடர்பிலும் சவூதி அரேபிய அரசுடன், அமைச்சரின் ஆலோ சனையின் பேரில், உடனுக்குடன் தொடர் பாடல்களைப் பேணுதல்

2. ஹஜ் காலங்களில் மக்காவிலும் மதீனாவிலும் அலுவலகங்களையும் மருத்துவ நிலையங்களையும் ஸ்தாபிப்பதற்கான பேச்சுவார்த்தைகளை சவூதி அரசாங்கத்துடன் மேற்கொள்வது.

3. ஹஜ் மற்றும் உம்ரா பயண ஏற்பாட்டாளர்களைத் தெரிவு செய்தல், பதிவு செய்தல், கண்காணித்தல், ஒழங்கு படுத்தல் என்பவற்றுக்கான முறை யொன்றை வகுத்தல்

4. ஹஜ்ஜாஜிகளைத் தெரிவு செய்வதற்கான முறைமை ஒன்றையும், அவர்கள் சுலபமாகவும், குறைந்த செலவிலும், சௌகரியமாகவும் ஹஜ் செய்வதற்கான முறைமை ஒன்றையும் வகுத்தல்

5. ஹஜ்ஜாஜிகளுக்கான சலுகைக் கட்டணங்களைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் விமானப் போக்குவரத்து நிறுவனங்களுடன் பேரம் பேசுதல்

6. யாத்திரிகளுக்குத் தேவையான தகவல்களைத் தேடி வழங்குதலும், அவர்களுக்கான பயிற்சிகளை ஒழுங்கு செய்தலும்

7. வரும் போதும் போகும் போதும் இலங்கையிலிருந்து புறப்படும் இடத்தில் யாத்திரிகளுக்கு தடுப்பூசி, மருத்துவப் பரிசோதனை, பாPஸ்களை விநியோகித்தல், பணம் மாற்றுதல், தேவையான விடயங்களில் அரச அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தல் போன்ற விடயங்களில் வழிகாட்டலும் உதவுதலும்

8. அல்லலுறும் வேளைகளில் நிவாரணம் அளித்தல்

9. இலங்கை முஸ்லிம்களின் பல்வேறு தெரிவுக் குழுக்களுக்கும் மானிய விலையைப் பெற்றுக் கொடுப்பதற்காக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு முறையொன்றை வகுத்துக் கொடுத்தல்

10. அமைச்சரின் அங்கீகாரத்துடன் வருடாந்த ஹஜ் திட்டத்தை இறுதிப் படுத்தலும், பயணம், தங்குதல் போன்ற ஒழுங்குகளைச் செய்தல் உள்ளிட்ட திட்டத்தை நடைமுறைப்படுத்தலும்

11. நிதியாண்டு ஆரம்பிப்பதற்கு குறைந்தது மூன்று மாதங்களுக்கு முன்னரே வரவு செலவுத் திட்டத்தைத் தயாரித்து அமைச்சருக்குச் சமர்ப்பித்து அங்கீகாரத்தைப் பெறுதல்

12. நிதி, குடிவரவு குடியகல்வு, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், துறைமுகம் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து போன்ற தொடர்புடைய அமைச்சுக்களுடனும், பயண முகவர்களுடனும் தொடர்பாடலும் தொடர்புகளைப் பேணுவதும்

13. யாத்திரிகளின் பொதுவான நலன்களைக் கவனித்தல்

14. கமிட்டியின் நடவடிக்கைகளைப் பகிரங்கப்படுத்துவதும், இது தொடர்பில் அமைச்சரினால் தீர்மானிக்கப்படுகின்ற ஒழுங்குகளில் யாத்திரிகளுக்குத் தேவையானவற்றை பகிரங்கப்படுத்தலும்

15. ஹஜ் மற்றும் உம்ரா தொடர்பில் அமைச்சரினால் குறித்துரைக்கப்படும் ஏனைய பணிகளை நடைமுறைப்படுத்தல்

இந்தப் பணிகளைச் செய்வதற்கான அனைத்து உதவிகளையும் அமைச்சர் செய்ய வேண்டும்.

கமிட்டியின் கூட்டங்கள் 

ஹஜ் பருவகாலம் தொடங்க முன்னர் ஹஜ் பயணத்தைத் திட்டமிடவும் ஒழுங்குபடுத்தவுமென குறைந்தது மாதம் ஒருமுறையாவது கமிட்டி கூட வேண்டும். அதன் பின்னர் மீளாய்வுக்காக ஒரு முறையாவது கூட வேண்டும்.  இது தவிர அமைச்சர் தேவையெனக் கருதும் நேரங் களிலும் கமிட்டியின் தலைவர் தேவையெனக் கருதும் நேரங்களிலும் கமிட்டி கூட முடியும். பணிப்பாளருடன் சேர்த்து ஐந்து பேர் கோரமாகக் கருதப்படும். பெரும்பான்மை வாக்கின் அடிப்படையிலேயே தீர்மானங்கள் நிறைவேற்றப் பட வேண்டும்.

உப குழுக்கள்

நிதி விவகாரத்துக்கும் ஹஜ் ஏற்பாடுகளுக்குமாக இரண்டு உப குழுக்களை கமிட்டி நியமித்துக் கொள்ளலாம். இதனுடைய பணிகளும் அதிகாரங்களும் கமிட்டியால் விதந்துரைக்கப்பட்டு அமைச்சரினால் அங்கீகரிக்கப்பட்டவையாக இருக்க வேண்டும். உப குழுக் களுக்குத் தேவையான எண்ணிக்கையிலான அங்கத்தவர்கள் கமிட்டியிலிருந்து நியமிக்கப்படுவர். கமிட்டியின் தலைவர் கலந்து கொள்ளும் அனைத்து உபகுழுக் கூட்டங்களுக்கும் கமிட்டியின் தலைவரே தலைமை வகிப்பார். 

கமிட்டி அங்கத்தவருக்கான தகைமைகள்

இலங்கைப் பிரஜையாக இருத்தல், முஸ்லிமாக இருத்தல், 30 வயதுக்குக் குறையாதவராக இருத்தல், சித்தசுவாதீனமுள்ளவராக இருத்தல், வங்குரோத்து நிலை அடைந்தவராக நீதிமன்றினால் குறித்துரைக்கப்படாதவராக இருத்தல், நீதிமன்றமொன்றினால் குற்றவாளியாகத் தீர்ப்பு வழங்கப்பட்டவரல்லாதவராக இருத்தல், ஒழுக்காற்று நடவடிக்கை காரணமாக அமைச்சரினாலோ அல்லது முறைகேடுகள் தொடர்பில் நீதிமன்றத்தினாலோ பதவி வறிதாக்கப்பட்ட வரல்லாது இருத்தல்.

நிதி, கணக்குகள், கணக்காய்வுகள்

கமிட்டிக்கென இலங்கை ஹஜ் உம்ரா நிதியம் ஒன்றை உருவாக்கலாம். இதற்குரிய நிதி, ஹஜ்ஜாஜிகளைப் பதிவு செய்யும் போதும், ஹஜ் முகவர்களைப் பதிவு செய்யும் போதும் பெறப்படும் கட்டணங்கள், மீளளிக்கப்பட வேண்டிய வைப்புக்கள் மற்றும்  சேவைக் கட்டணங்கள், ஹஜ் செய்வதற்காக ஹாஜிகளிடமிருந்து பெறப்படும் பணம், வைப்புக்கள் மற்றும் முதலீடுகளினால் கிடைக்கும் இலாபங்கள். அரச அங்கீகாரம் பெற்ற திறைசேரி போன்ற மூலங்களிலிருந்து பெறப்படும் கடன், அன்பளிப்பு போன்றவை, அமைச்சரினால் திறைசேரி மூலம் பெற்றுக் கொடுக்கப்படும் நிதி, பாராளுமன்றத்தினால் ஒதுக்கப்படும் நிதி.

நிதியைப் பயன்படுத்தல்

கமிட்டி தலைவருக்கும் அங்கத்தவர் களுக்குமான அலவன்ஸ் வழங்குதல், உயர் அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் சம்பளம் வழங்குதல், தமது பணியையும் அதிகாரங்களையும் பயன்படுத்தும் போது எழும் செலவுகள், சட்டம் செலுத்துமாறு வேண்டும் செலவுகள், அமைச்சர் அங் கீகரிக்கும் ஏனைய செலவுகள்

விசாரணைக் குழு

ஹஜ் முகவர்கள் தொடர்பிலான யாத்திரிகளின் முறைப்பாடுகளை விசா ரிப்பதற்காக சுயாதீனக் குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும். இதன் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி, ஜனாதிபதி  சட்டத்தரணி அல்லது ஓய்வு பெற்ற அரச ஊழியர் ஒருவரும் இன்னும் இரு அங்கத்தவர்களும் நியமிக்கப்பட வேண்டும். இந்தக் குழு தமது கண்டறிதல்களை கமிட்டிக்கு சமர்ப்பிக்க வேண்டும். ஏதேனும் ஹஜ் முகவர் நிலையங்கள் தவறெனக் காணப்படுமிடத்து, எழுத்து மூலமான எச்சரிக்கை, அபராதம், தண்டனை, இடைநிறுத்தல், அனுமதியை ரத்துச் செய்தல் அல்லது கமிட்டி சிபாரிசு செய்யும் வேறேதேனும் தண்டனைக்கு உள்ளாதல் வேண்டும்.

பொதுவானவை

யாத்திரிகளுக்கான பாஸ் வழங்கும் அதிகாரம் கமிட்டிக்கு வழங்கப்பட வேண்டும். தனது பணிகளைச் செய்யாத போது அல்லது தவறிழைக்கும் பொழுது கமிட்டியைக் கலைக்கும் அதிகாரம் அமைச்சருக்கு உண்டு. இது தொடர்பில் பாராளுமன்றத்துக்கு அறிவிக்க வேண்டும். கமிட்டி நீதிமன்றம் செல்ல நேருமிடத்து அதற்கான செலவை கமிட்டியின் நிதியிலிருந்தே பெற வேண்டும். யாத்திரிகள் எவரும் கமிட்டி தொடர்பான அதிருப்திகளை கமிட்டியிடம் முறையிடலாம். இதற்குச் சரியான நிவாரணம் கிடைக்காதவிடத்து அமைச்சரிடம் முறையிடலாம். ஒவ்வொரு நிதி ஆண்டிலும் நிதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அமைச்சர் மூலமாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இந்தச் சட்டத்தின் மூலம் தவறொன்றுக்குக் குற்றவாளியாகும் எவருக்கும் மூன்று வருடங்களுக்குக் குறையாத சிறைத் தண்டனை அல்லது மூன்று மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட வேண்டும். குற்றம் ஒரு நிறுவனத்தினால் புரியப்பட்டிருந்தால் அந்த நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களும் தவறிழைத்தவர்களாகக் கருதப்பட வேண்டும்.

About the author

Administrator

Leave a Comment