Features நாடுவது நலம்

நியூசிலாந்து துப்பாக்கிச் சூட்டு விவகாரம்: உலகிற்கு சொல்ல வந்த செய்தி என்ன?

Written by Administrator

இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் | நாடுவது நலம்

நியூசிலாந்தின் பிரதமர் ஜெசின்டா ஆர்டன் இன்று முழு உலகினதும் அவதானத்தை வென்ற வீராங்கனையாக மாறியிருக்கின்றார். நியூசிலாந்தின் வரலாற்றில் மிகவும் கவலைக் கிடமான தினமாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்தது. இக் கவலையான தினத்தில் நியூசிலாந்து பிரதமரின் நடத்தை எல்லோரதும் அவதானத்தை வென்றுள்ளது. “நாம் எல்லோரும்  ஒரே இன மக்கள். அவர்கள் (முஸ்லிம்கள்) எம்முடைய பிரிவினர். இக்கவலையான நிகழ்வு எம் செவிகளில் எதிரொலிக்கிறது” என்பதாக இச்சம்பவத்தைத் தொடர்ந்து பிரதமர் கருத்துத் தெரிவித்திருந்தார்.

பகைமை, கோபாவேஷம் மற்றும் இனவாதத்திற்கு தூபமிடு கின்ற உலகின் ஒரு சில தலைவர்களுக்கு நியூசிலாந்து பிரதமரின் நடவடிக்கைகள் முன்மாதிரியாகத் திகழ்கின்றது. எமது நாட்டில் மதவாதம், இனவாதம், குலபேதங்கள் மற்றும் துவேஷக் கருத் துக்களுக்கு எண்ணெய் ஊற்றும் அரசியல்வாதிகளுக்கும் இப்படி யான நடத்தைகளின் மூலம் பல்வேறு விடயங்களைக் கற்றுக் கொள்ள முடிகின்றது.

உலகம் பூராகவும் அரசியல், வியாபார நோக்கங்களுக்கு மத எதிர்ப்பைக் காட்டுவோருக்கும் வெள்ளையர் அல்லாத இனங் களுக்கு எதிராக பரப்பப்படும் கோபாவேசக் கருத்துக்கள் குறித்து கடுமையான முறையில் சிந்திக்க வேண்டிய காலம் எழுந்துள்ளது. இவ்வாறான துவேசக் கருத்துக்களை பரப்பும் தீவிர வலதுசாரி அமைப்புக்களின் சுற்றுநிரூபங்கள் தொடர்பில் உலகம் தனது அவதானத்தைச் செலுத்த வேண்டும் என்ற செய்தியையே நாம் இந்நிகழ்வினூடாக நோக்க வேண்டியுள்ளது.

இத்தகைய சுற்றுநிரூபத்திற்கு இரையாகிப் போயுள்ள தீவிர வலதுசாரி அரசியல்வாதிகளினதும், ஊடகங்களினதும் மிக  மோசமான செயற்பாடுகள் இப்போதாவது நிறுத்தப்பட வேண் டும். இத்தகைய தீவிரவாத, மத எதிர்ப்புப் பிரச்சாரங்கள் மற்றும் எதிரிகளை உருவாக்கி பீதி, சந்தேகங்களை ஏற்படுத்தி சச்சரவு களை உருவாக்கும் செயற்பாடுகளுக்கு முன்பாக அவற்றை கண்டிப்பதற்கும், அவ்வாறான செயற்பாடுகளை நிறுத்துவதற்கும்  பொறுப்புவாய்ந்தவர்கள் கிளர்ந்தெழ வேண்டும்.

ஜெசின்டா அந்நாட்டு முஸ்லிம் தலைவர்களை பாராளுமன்றத்திற்கு அழைத்து சபாநாயகரின் தலைமையில் கூட்டமொன்றை நடாத்தியுள்ளார். இக்கூட்டம் ஆரம்பிக்கப்படும் வேளையில் துஆ ஓதுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அத்துடன் நியுசிலாந்து பிரதமர் பாராளுமன்றில் ஆற்றிய உரையும் உலக மக்களை கண் திறந்து பார்க்க வைத்துள்ளது. “இப்படியான நிகழ்வுகள் மீண்டும் நியூசிலாந்தில் இடம்பெறுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது. ஏன் இப்படி நடந்தது என்பது குறித்து விசாரணைகளை மேற்கொள்வோம். சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி, நியாயத்தை நிலைநாட்டுவதற்கு நடவடிக்கை எடுப்போம்.

குற்றவாளிகளுக்கு நியூசிலாந்து சட்டத்திற்கு முகம்கொடுக்க நேரிடும். மத நிந்தனை மற்றும் கோபாவேசக் கருத்துக்களை நியூசிலாந்தில் தெரிவிப்பதற்கு இடம் கிடைத்தமை குறித்தும் நாம் அவதானத்தை செலுத்துவோம். பொறுப்புவாய்ந்தவர்கள் தங்களது பொறுப்புக்களை நிறைவேற்றியமை குறித்தும் தேடிப் பார்ப்போம். அன்று கிறைஸ்சேர்ஜ் பள்ளிவாசலின் நுழைவாயில் முன்பாக இருந்துகொண்டு அக்குற்றவாளிக்கு சலாம் கூறி உள்ளே வாருங்கள் என்று அங்கிருந்த பெரியார்கள் அழைப்பு விடுத்தமை பற்றி எனக்கு வியப்பாக உள்ளது.

கோபாவேசத்திற்கும், இனவாதத்திற்கும் எதிராக இனிமேல் நாம் எமது நுழைவாயிலை மூடிவிடுவோம். எமது நாட்டில் 200இற்கும் மேற்பட்ட இனக்குழுமங்கள் உள்ளன. அவர்கள் அனைவருக்கும் எமது வாயில்கள் எப்போதும் திறந்தே இருக்கும். ஆனால் இனவாதச் செயற்பாடுகளுக்கு எதிராக எமது வாயில்கள் மூடப்படும்” என்பதாக பிரதமர் பாராளுமன்றில் நீண்டதொரு உரையை ஆற்றியிருந்தார்.

உண்மையிலேயே ஜெசின்டா ஆர்டனின் கருத்துக்களின் மூலம் மனிதாபிமானமே வெளிப்பட்டது. அவர் தனது செயற்பாடுகளுக்கூடாக மனிதாபிமானத்தையே காண்பித்தார். முழு உலகிலும் ஒரு மனித இனமே உள்ளது. நாம் எல்லோரும் ஒன்றுபட்டு வாழ்கின்றோம் என்கின்ற கருத்துக்களையே அவரது உரையினூடாக விளங்க முடிகிறது. இந்தச் சம்பவத்திற்கு பிறகு முழு உலகிற்கும் ஒரு வெளிச்சமே கிடைப்பதாக உள்ளது.

நியூசிலாந்தின் துரதிஷ்ட நிகழ்வை தொடர்ந்து லண்டனின் ரீஜன்ட் முஸ்லிம் பள்ளிவாசலுக்கு சென்ற கெண்டபரியைச் சேர்ந்த கிறிஸ்தவ ஆண்டகை தெரிவித்த கருத்துக்கள் மிக முக்கியமானவை. அவர் அங்கு ஆற்றிய உரையில், “இப்படு கொலையானது பிசாசின் செயலாகும். நியூசிலாந்தில் முஸ்லிம்களை முன்னிறுத்தி அந்நாட்டில் பெரும்பான்மையான மக்கள் தெரிவித்த கருத்துக்கள் எம்மை உற்சாகப்படுத்துவதாக உள்ளன. இஸ்லாத்திற்கு எதிரான யுத்தமொன்றை உருவாக்கவே இக் கொலையாளிக்கு அவசியப்பட்டிருந்தது.

ஆனால் அதற்கு முற்றிலும் மாற்றமான விடயமே அரங்கேரியது. இதற்கெதிராக உலகம் முழுவதிலும் மனிதாபிமானக் கூட்டுப்படையொன்று மேலெழுந்தது. இயேசு நாதர் தனது ஆதரவாளர்களுக்கு ஐக்கியத்தைக் கட்டியெழுப்புமாறே உபதேசம் செய்துள்ளார். அதற்கு செயற்பாடுகள் அவசியம். இறைவனுக்கு முன்னால் நாம் என்பது நீங்கள். நீங்கள் என்பது நாங்கள். நாம் ஒன்றுபட்டு செயற்படுவோம். இறைவன் உங்களை பலப்படுத்துவான்” என்றார். இது தீவிரவாதத்திற்கு எதிராக அனைத்து இன மக்களையும் ஒன்றுபடுமாறு விடுக்கும் அறை கூவலாகும்.

கனடாவின் இளம் பிரதமர் தெரிவித்த கருத்துக்களை நோக்கும் போதும் உலக நாடுகளுக்கு இப்படிப்பட்டவர்களே தலைமை வகிக்க வேண்டும் என்ற யோசனை வருகின்றது. ஜெஸ்டின் புரூடோ பின்வருமாறு கூறினார். “இப்படுகொலை இஸ்லாத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட இஸ்லாமோபோபியா மூலம் தூண்டப்பட்ட விடயமாகும். ஒரு பித்துப் பிடித்த தீவிரவாதி அம்மக்களை சுட்டிருக்கிறான். அம்மக்கள் படும் வேதனையை நாம் உணர்கின்றோம்.” என்றார்.

About the author

Administrator

Leave a Comment