உலக செய்திகள்

அமீரகத்தில் பயங்கரவாத குற்றச்சாட்டில் 8 லெபனானியா்கள்

Written by Administrator

ஐக்கிய அறபு அமீரகத்தில் 8 லெப னானியர்கள் பயங்கரவாத குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளை எதிர் கொண்டுள்ளதாக அமீரக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இவர்கள் ஹிஸ்புல்லாஹ் இயக்கத்தோடு தொடர்பானவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

தமது தரப்பு வக்கீல்களை நிறுத்துவதற்கு இவர்கள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது. இவர் கள் மீதான எந்தக் குற்றச்சாட்டும் இதுவரை பகிரங்கமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால், பயங்கரவாதத்தோடு தொடர்பானவர்கள் என்று அரச தரப்பால் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

லெபனானிய பாராளுமன்றத்தில் 13 உறுப்பினர்களைக் கொண்டுள்ள ஹிஸ்புல்லாஹ், 3 அமைச்சுப் பதவிகளையும் கொண்டிருக்கின்றது. எவ்வாறாயினும், அவ்வியக்கம் ஐக்கிய அறபு அமீரகத்தின் பயங்கரவாதப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

இவர்கள் 8 பேரும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் முறையான குற்றப்பத்திரிகை எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை என்றும் இவர்களது குடும்பத்தினர் மனித உரிமை கண்காணிப்பகத்திடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

சட்டத்தின் ஆட்சியை மதிக்காத ஐக்கிய அறபு அமீரகம், நீதி விசாரணைகளின்றி தடுப்புக் காவலில் வைத்திருப்பது மீறல் என மனித உரிமை கண்காணிப்பகம் அறிவித்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவரும் 15 ஆண்டுகளுக்கு மேலாக அமீரகத்தில் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

About the author

Administrator

Leave a Comment