உலக செய்திகள்

கோலான் குன்றுகள் இஸ்ரேலுக்குரியவை – ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

Written by Administrator

இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு உட்பட்ட சிரியாவுக்குச் சொந்தமான கோலான் குன்றுகள் இஸ்ரேலின் இறைமைக்கு உட்பட்ட பிராந்தியம் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது அமெரிக்காவின் கொள்கையில் ஏற்பட்டுள்ள தலைகீழ் மாற்றம் எனக் கருதப்படுகின்றது.

இஸ்ரேலிய பிரதமர் நெடன்யாஹு வெள்ளை மாளிகைக்கு மேற்கொண்ட விஜயத்தினை அடுத்து டொனால்ட் ட்ரம்ப் கோலான் குன்றுப் பிராந்தியம் தொடர்பான ஆவணத்தில் ஒப்பமிட்டுள்ளார். 1967 இல் நடந்த 6 நாள் யுத்தத்தின்போதே இஸ்ரேல் சிரியாவுக்குச்     சொந்தமான கோலான் குன்றுகளை ஆக்கிரமித்தது. எகிப்துக்குச் சொந்தமான சினாய், லெபனானுக்குச் சொந்தமான ஷிபா பண்ணை என்பவற்றோடு சிரியாவுக்குச் சொந்தமான கோலான் குன்றுப் பிரதேசத்தையும் இஸ்ரேல் கைப்பற்றியது. அதன் பின்னர் கோலான் குன்றுகளின் பெரும்பாலான பகுதியில் யூதர்கள் குடியேற்றப்பட்டனர். மிகக் குறைந்த நிலப்பரப்பில் சிரிய அறபிகளும் வாழ்கின்றனர்.

சர்ச்சைக்குரிய இப்பிராந்தியம் சர்வதேச கண்காணிப்பின் கீழ் இருந்து வந்தது. தற்போது ட்ரம்ப் அதனை இஸ்ரேலிய பிராந்தியம் என அறிவித்துள்ளமை பிராந்தியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

About the author

Administrator

Leave a Comment