உள்நாட்டு செய்திகள்

ஹஜ் சட்ட மூலத்துக்கு மேலும் கால அவகாசம்

Written by Administrator

ஹஜ் உம்ரா ஏற்பாடுகள் கடந்த காலங்களில் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் நிலையில் ஹஜ் உம்ரா ஏற்பாடுகளுக்கான சட்டமொன்றை வகுப்பதற்கு முஸ்லிம் சமய விவகாரங்கள் அமைச்சு பொது அபிப்பிராயங்களைக் கேட்டு விடுத்திருந்த வேண்டுகோளுக்கான காலக்கெடு மார்ச் 06 ஆம் திகதி நிறைவுற்றிருந்தது.

இதனைத் தொடர்ந்து மார்ச் 26 அன்று இது தொடர்பில் இறுதி முடிவொன்றை எடுப்பதற்கான கூட்டம் முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால் சேவைகள் அமைச்சில் நடைபெற்றது. இதன் போது பொதுமக்கள் தமது கருத்துக்களை வழங்குவதற்கு மேலும் இரண்டு வார காலம் அவகாசம் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உத்தேச ஹஜ் உம்ரா சட்டமூலம் தொடர்பில் பொது மக்கள் அபிப்பிராயம் வேண்டப்பட்டிருந்த நிலையில் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸிலும் வரைபுகளைச் சமர்ப்பித்திருந்தன. சிவில் சமூகத்தின் பிரதிநிதிகள் மேலும் கால அவகாசம் வேண்டிக் கொண்டதற்கிணங்கவே ஏப்ரல் 09 ஆம் திகதி வரை கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

About the author

Administrator

Leave a Comment