உலக செய்திகள்

நியூசிலாந்தில் இயந்திரத் துப்பாக்கிகளுக்குத் தடை

Written by Administrator

கிறிஸ் சேர்ச் பள்ளிவாயல்களில் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் மீது நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 50 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதை அடுத்து அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆயுத விற்பனை தொடர்பான சட்டத் திருத்தங்களை அறிமுகப்படுத்தவுள்ளார். தாக்குதலுக்குப் பயன்படுத்தும் குழல் துப்பாக்கிகள், தன்னியக்க ஆயுதங்கள் என்பவற்றைத் தடைசெய்யும் சட்டம் அமுலுக்கு வரவுள்ளதாக நியூசிலாந்தின் பிரதமர் ஜெசிந்தா ஏடன் ஊடக வியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

அங்கு கருத்து வெளியிட்ட அவர் மேலும் தெரிவித்ததாவது, “நாம் எதிர்காலத்தில் மேற்கொள்ளப் போகின்ற செயற்பாடுகளின் ஆரம்பமே இதுவாகும் என உறுதியாக நம்புங்கள். இது நாட்டின் நலன்களையும் பாதுகாப்பையும் கருத்திற் கொண்ட நடவடிக்கையாகும். மீண்டும் ஒருபோதும் எமது நாட்டில் பயங்கரவாதத் தாக்குதல் ஒன்று நடைபெறாமல் தடுப்பதற்கு இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளோம். ஏப்ரலில் இச்சட்டம் நடைமுறைக்கு வருவதோடு, நாட்டில் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களுக்கான தெளிவான பட்டியலொன்றும் வெளியிடப்படும். தாக்குதல் நடந்து ஆறு நாட்களில் இச்சட்டத்தை நாம் அறிமுகப்படுத்துகின்றோம் என நியூசிலாந்து பிரமதமர் தெரிவித்தார்.

About the author

Administrator

Leave a Comment