உள்நாட்டு செய்திகள்

பொத்துவில் கல்வி வலயம் மே 03 இல் ஆரம்பம்

Written by Administrator

நீண்ட காலமாகக் கோரப்பட்டு வந்த பொத்துவில்லுக்கான தனியான கல்வி வலயம் மே மாதம் 03 ஆம் திகதி காலை 09.00 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் திறைசேரியுடனும் கல்வி அமைச்சுடனும் உரையாடியதன் பின்னர், அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டு கிழக்கு மாகாணத்தில் இரண்டு புதிய கல்வி வலயங்கள் உருவாக்கப்பட்டதன் அடிப்படையிலேயே பொத்துவிலுக்கான கல்வி வலயம் வழங்கப்பட்டுள்ளது. பொத்துவில் பிரதேசத்தினை அக்கரைப்பற்று பிரதேசத்தில் இருந்து பிரித்தும், உஹன பிரதேசத்தை அம்பாறை கல்வி வலயத்தில் இருந்து பிரித்தும் இரண்டு புதிய கல்வி வலயங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. உஹன கல்வி வலயம் மே 02 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. இத்துடன் கிழக்கு மாகாணத்தின் கல்வி வலயங்கள் 19 ஆக அதிகரிக்கின்றது.

பொத்துவில் பிரதேச மாணவர்களின் கல்வி சம்பந்தமாக அப்பிரதேச அதிபர்களும் ஆசிரியர்களும் 55 கிலோமீற்றர் அப்பாலுள்ள அக்கரைப்பற்று வலயத்துக்கு அடிக்கடி செல்ல வேண்டியுள்ளது. பொத்துவிலில் வலயக் கல்வி அலுவலகம் அமைந்தால் லாகுகல, பாணம, பொத்துவில் பிரதேசங்களின் 30 க்கும் மேற்பட்ட பாடசாலைகளின் செயற்பாடுகளை நெறிப்படுத்த முடியும். 2014 இல் பொத்துவில் பிரதேசத்துக்கான உப வலயக் கல்வி அலுவலகத்தை வலயக் கல்வி அலுவலகமாக மாற்றுவதற்கான முன்னெடுப்புக்கள் நடந்திருக்கவில்லை என ஆளுனரிடம் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.

About the author

Administrator

Leave a Comment