உலக செய்திகள் பலஸ்தீன

எகிப்தில் கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை நாம் கடைப்பிடிப்போம்

Written by Administrator

ஹமாஸ் அறிவிப்பு

ஏற்கனவே எகிப்தின் மத்தியஸ்தத்தோடு கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்தும் நாம் கடைப்பிடிபோம் என ஹமாஸ் அறிவித்துள்ளது. காஸா மீது இஸ்ரேலிய விமானங்கள் தாக்குதல்களை ஆரம்பித்ததைத் தொடர்ந்து ஹமாஸ் இவ்வறிவித்தலை விடுத்துள்ளது. பரபஸ்பரம் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுக்குப் பின்னர் நாம் போர் நிறுத்தத்தையே கடைபிடிப்பிக்கின்றோம் என ஹமாஸ் தெரிவித்த பின்னரும் காஸா பள்ளத்தாக்கில் குண்டு வெடிப்புச் சத்தங்கள் தொடர்ந்தும் கேட்டவண்ணமுள்ளன.

இஸ்ரேல் இது குறித்து எவ்விதக் கருத்தையும் இதுவரை வெளியிடவில்லை. கடந்த திங்கள் (25.03.19) இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவை நோக்கி காஸாவிலிருந்து அனுப்பப்பட்ட ஏவுகணைகள் வெடித்துச் சிதறியதில் 7 இஸ்ரேலியர்கள் காயமடைந்துள்ளனர்.

இதற்குப் பதிலளிக்கும் முறையில் இஸ்ரேல் கடும் வான்தாக்குகளைத் ஆரம்பித்துள்ளது. தற்போது ஹமாஸ் போர் நிறுத்தத்தைக் கடைப்பிப்பதாகவும் இஸ்ரேலிய தாக்குதல் தொடர்ந்தால் தாம் போர் நிறுவத்தத்தைக் கைவிட வேண்டி வரும் எனவும் ஹமாஸ் எச்சரித்துள்ளது.

About the author

Administrator

Leave a Comment