உலக செய்திகள்

இலங்கை – இந்திய ராணுவத்தினர் கூட்டாகப் பயிற்சி

Written by Administrator

இலங்கை இராணுவத்தினரும் இந்திய இராணுவத்தினரும் கூட்டாகப் பயிற்சி எடுக்கின்ற மித்ரசக்தி VI இராணுவப் பயிற்சிகள் மார்ச் 26 ஆம் திகதி ஆரம்பமாகி, ஏப்ரல் மாதம் 08 ஆம் திகதி வரை நடைபெற்றது. தியத்தலாவையில் நடக்கும் இந்தப் பயிற்சிகளுக்கென 11 அதிகாரிகள் உள்ளிட்ட 120 இந்திய இராணுவ வீரர்கள் இலங்கை வந்தனர்.

மித்ரசக்தி இராணுவப் பயிற்சிகள் ஒவ்வொரு வருடமும் இந்தியாவிலும் இலங்கையிலுமாக மாறி மாறி நடைபெற்று வருகின்றன. கடந்த வருடம் பூனேயில் நடைபெற்ற மித்ரசக்தி V இராணுவப் பயிற்சிகளில் இலங்கையில் இருந்து 120 இராணுவ வீரர்கள் கலந்து கொண்டிருந்தனர். இராணுவங்களுக்கிடையில் பிராந்தியத்தில் நடைபெறுகின்ற மிகப்பெரிய இருதரப்பு இராணுவப் பயிற்சி இதுவாகும். கடந்த கால அனுபவங்களை வைத்து இந்தப் பயிற்சித் திட்டம் முன்னரை விட மேம்படுத்தப்பட்டு நடத்தப்பட்டு வருவதாக இலங்கைக்கான இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது.

இந்தப் பயிற்சிகளின் ஊடாக பன்னாட்டுப் பயங்கரவாதங்களையும் எதிர்கொள்வதற்கான தேர்ச்சிகளைக் கட்டியெழுப்புதல், கூட்டு தந்திரோபாய நடவடிக்கைகளை மேற்கொள்தல் போன்றவற்றில் இரு தரப்பும் தமது அனுபவங்களையும் திறமைகளையும் பரிமாறிக் கொள்ளவும் பயிற்சி எடுக்கவும் உள்ளனர் எனவும் இந்தியத் தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

About the author

Administrator

Leave a Comment