உள்நாட்டு செய்திகள்

மக்களின் பங்களிப்புடனான யாப்பு உருவாக்கத்துக்கு ஏற்பாடு

Written by Administrator

புதிய அரசியல் யாப்பொன்று உருவாக்குவது தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் சிவில் சமூக அமைப்புக்கள் பலவும் இதற்குப் புறம்பாக யாப்பு தயாரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.

மக்கள் மைய யாப்பொன்றே இலங்கையின் நீண்ட காலப் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வாக அமையும் என்ற கருத்தைப் பேசி வருகின்ற பல சிவில் அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து மக்கள் மைய யாப்புருவாக்கத்துக்கான இயக்கம் (Movement for Making People’s Constitution) என்ற பெயரில் மக்கள் மைய யாப்பினை உருவாக்குவதற்கான அமைப்பொன்றைத் தோற்றுவித்துள்ளனர்.

மக்கள் மைய யாப்பின் முக்கியத்துவத்தை விளங்க வைக்கும் நோக்கில் நாடு தழுவிய பிரச்சாரங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு இந்த இயக்கம் தீர்மானித்திருக்கிறது. அரசியல் யாப்புருவாக்கத்தில் மக்களின் பங்களிப்பை அதிகளவில் பெறுவதே இந்த இயக்கத்தின் பணியாகும்.

இந்த இயக்கத்துடன் இணைந்து மக்கள் மைய யாப்பினை உருவாக்குவதில் பங்களிக்க விரும்புகின்ற சிவில் அமைப்புக்கள் 0727408329 (ரஸா முஹம்மத்), 0718067967 (Dr. சுகத் அமரஜீவ) ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்பட்டுள்ளனர்.

About the author

Administrator

Leave a Comment