உலக செய்திகள்

பிஜேபியின் தேர்தல் விஞ்ஞாபனம் மதக் குரோதத்தை வளா்க்கின்றது

Written by Administrator

பிஜேபி சமீபத்தில் வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனம் முஸ்லிம் விரோத மனப்பாங்கை இந்துக்களிடம் வளர்ப்பதோடு, மோசமான அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று இந்திய எழுத்தாளர் அருந்ததி ராய் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய விஞ்ஞாபனத்தில் பிஜேபி கட்சி 75 வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. அதில் காஷ்மீர் பற்றிய வாக்குறுதியும் ஒன்றாகும். அரசியலமைப்பின் 35 ஏ பிரிவின்படி காஷ்மீரில் வசிக்காத எவரும் இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரில் சொத்துக்களை வாங்குவது தடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய விஞ்ஞாபனத்தின் படி இத்தடை நீக்கப்படவுள்ளது. காஷ்மீர் குறித்து அரசியலமைப்பிலுள்ள விசேட ஏற்பாடுகளை பிரதமர் நரேந்திர மோடி மீறி வருகின்றார் எனக் கூறப்படுகின்றது.

ஜம்மு காஷ்மீரிலுள்ள முஸ்லிம்கள் இந்தியாவை ஆக்கிரமிப்பு நாடாகவே பார்க்கின்றனர். இந்நிலையில் இப்புதிய சட்டம் பிராந்தியத்தில் பெரும் பதட்டத்தையே உருவாக்கும் என்று எச்சரிக்கப்படுகின்றது.

பிஜேபியின் புதிய விஞ்ஞாபனத்தில் இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக அக்கட்சிக்காரர்கள் கூறி வருகின்றனர். நியூடில்லியுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தின் ஹிந்து தேசியக் கட்சியான பிஜேபியின் தவிசாரளர் அமித் ஷாவின் தலைமையில் தேர்தல் விஞ்ஞாபனத் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் 33 வீதமான ஆசனங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்பதும் வாக்குறுதிகளில் ஒன்றாகும்.

About the author

Administrator

Leave a Comment