உலக செய்திகள்

இஸ்ரேலை அங்கீகரித்தால் சிரியா கோலான் குன்றுகளை மீளப் பெறலாம்

Written by Administrator

சிரியா இஸ்ரேலை அங்கீகரித்து ஏற்றுக் கொண்டால் கோலான் குன்றுகளை மீளப் பெறலாம் என எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹுஸ்னி முபாரக் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் தனது அயல் நாடுகளுடன் ராஜதந்திர உறவுகளைச் சுமுகமாக்குவதற்கு முயற்சிக் கும் இத்தருணத்தில், சிரியா இஸ்ரேலை அங்கீகரிக்க வேண்டும் என ஹுஸ்னி முபாரக் கூறியுள்ளார்.

கெய்ரோ-24 எனப்படும் எகிப்திய தொலைக் காட்சிக்கு முன்னால் ஜனாதிபதி முபாரக் வழங்கிய நேர்காணலிலேயே இவ்வாறு தெரித்தார். கோலான் குன்றுகளை மீளப் பெறுவதற்கு இஸ்ரேலிய அதி காரிகளுடன் நான் தொடர்பு கொண்டேன். அப்போது அவர்கள் சிரியத் தலைநகர் டமஸ்கஸில் இஸ்ரேலிய தூதரகமொன்றை அமைப்பதற்கு அனுமதியளிக்கப் பட வேண்டும் என்று கோரினர். அதேபோன்று டமஸ் கஸின் தூதரகமொன்று டெல் அவிவிலும் தொடங் கப்பட வேண்டும். இது இஸ்ரேலை சிரியா அங்கீ கரித்தமைக்கான அடையாளமாகக் கருதப்படும் என இஸ்ரேலிய அதிகாரிகள் கூறியதாக எகிப்தின் முன் னாள் ஜனாதிபதி முபாரக் அந்நேர்காணலில் குறிப் பிட்டுள்ளார்.

சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி ஹாபிஸ் அல் அஸத், இஸ்ரேலை நிராகரித்தவர் என்பது குறிப் பிடத்தக்கது. ஹாபிஸ் இஸ்ரேலை ஏற்றுக் கொள் ளாமையே கோலான் குன்றுகள் மீதான இஸ்ரேலின் இறைமையை அமெரிக்கா அங்கீகரித்தமைக்கான காரணம் என்று முபாரக் அங்கு தெரிவித்தார்.

About the author

Administrator

Leave a Comment