உள்நாட்டு செய்திகள்

ஐ.நா அமைதிப்படையில் இலங்கைப் பொலிஸ்

Written by Administrator

ஐக்கிய நாடுகளின் அமைதிப் படை இராணுவத்துடன் இணைந்து கடமையாற்றுவதற்காக  இலங்கையின் பொலிஸ் அதிகாரிகள் மேலும் 69 பேர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளார்கள்.

ஐக்கிய நாடுகள் சபையினால் நடத்தப்பட்ட விசேட நேர்முகப் பரீட்சையின் பின்னரே குறித்த 69 பேருக்கும்  இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.  இவர்களில் பொலிஸ் கான்ஸ்டபிள் தொடக்கம் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் வரை காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் தமது கடமைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் அவர்களது பின்னணி குறித்த அறிக்கையை மனித உரிமைகள் ஆணைக்குழு ஊடாக பெற்றுக்கொள்வதற்கு ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

About the author

Administrator

Leave a Comment