உலக செய்திகள்

முர்ஸிக்கு எதிரான இராணுவப் புரட்சிக்குப் பின்னால் இஸ்ரேல் இருந்தது

Written by Administrator

ஜனநாயக ரீதியாகத் தெரிவுசெய்யப்பட்ட எகிப்திய ஜனாதிபதி முஹம்மத் முர்ஸியை பதவி கவிழ்ப்பதற்கு இஸ்ரேல் கடுமையாகப் பாடுபட்டது என்று இஸ்ரேல் இராணுவ பிரிகேடியர் ஜெனரல் அரியே எல்தாத் உள்ளூர் பத்திரிகையொன்றில் எழுதிய கட்டுரையில் தெரிவித்துள்ளார். 2013 இல் ஜனாதிபதி முர்ஸி பதவி கவிழ்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலில் இருந்து வெளிவரும் மாரிவ் எனும் செய்திப் பத்திரிகையில், ஜனவரி புரட்சியில் எகிப்திய ஜனாதிபதி முர்ஸியை பதவி கவிழ்ப்பதற்கு நாம்  சில அறபு நாடுகளோடு சேர்ந்து திட்டமிட்டோம். காரணம், இஸ்ரேலுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகளை ரத்துச் செய்வதற்கு முர்ஸி கருதியிருந்தார்.

மேலும் சினாய் பாலைவனத்திற்கு அதிக எகிப்திய படையினரை அனுப்பும் நோக்கமும் அவரிடமிருந்து என ஜெனரல் அரியே அக்கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

இத்தருணத்திலேயே இஸ்ரேல் தனது ராஜதந்திரக் கருவிகளைக் கையாண்டு அப்துல் பத்தாஹ் ஸீஸியை அதிகாரத்திற்குக் கொண்டு வந்து இந்தத் திட்டத்தை எதிர்க்க வேண்டாம் என ஜனாதிபதி பராக் ஒபாமாவின் கீழிருந்த அமெரிக்க நிர்வாகத்தை ஏற்கச் செய்தது.

இஸ்ரேலியர்களின் எதிர்பார்ப்புக்கு மாற்றமாக இஸ்ரேலுக்கும் எகிப்துக்கும் இடையிலான கேம் டேவிட் ஒப்பந்தம் 40 ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் உள்ளது. உண்மையான அமைதி பிராந்தியத்தில் நிலவாத போதும் பலஸ்தீன் – இஸ்ரேல் மோதல் தீர்க்கப்படாதபோதும் ஒப்பந்தம் நீடிக்கின்றது. பலஸ்தீனர்களோடும் அறபுகளோடும் நாம் செய்யும் யுத்தம் மத ரீதியானது. எகிப்து தற்போது எங்கள் பக்கம் நிற்கின்றது. 40 ஆண்டுகளுக்குப் பின்னர் இஸ்ரேல் நீர்மூழ்கிக் கப்பல்களை எகிப்துக்கு விற்பனை செய்துள்ளமை எகிப்தின் இன்றைய ஆட்சியாளர்கள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளனர் என்பதற்குத் தெளிவான உதாரணமாகும் என அரியே எல்தாத் தெரிவித்துள்ளார்.

About the author

Administrator

Leave a Comment