உலக செய்திகள்

ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை ஒரு பயங்கரவாதக் குழுவாகும்

Written by Administrator

ஈரானின் இஸ்லாமிய புரட்சி இராணுவம் ஒரு பயங்கரவாத அமைப்பாகும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த வாரம் அறிவித்துள்ளார். ட்ரம்பின் இந்த அறிவித்தல் ஈரானில் கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

2015 இல் ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகிக் கொண்டதை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறிவில் பெரும் விரிசல் ஏஏற்பட்டது. ஒன்றன் பின் ஒன்றாக பல பொருளாதாரத் தடைகள் அமெரிக்காவினால் ஈரான் மீது விதிக்கப்பட்டன.

சம்பிரதாயங்களுக்கு மாற்றமாக இன்னொரு நாட்டின் தேசிய இராணுவத்தை அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் பயங்கரவாதக் குழு என்று முத்திரை குத்தியுள்ளார். இத்தகைய அறிவிப்பு வரலாற்றில் இதுவே முதன்முறையாகும். ஈரான் இதற்கு உடனடியாகப் பதிலளித்துள்ளது.

அமெரிக்க இராணுவம் ஓர் பயங்கரவாத அமைப்பு என்று ஈரானின் அரச தொலைக்காட்சி கருத்து வெளியிட்டுள்ளது. பிராந்தியத்திலுள்ள அமெரிக்க இராணுவ முகாம்களும் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் படையும் பயங்கரவாத அரண்கள் என்றும் பயங்கரவாதிகள் என்றுமே கருதப்பட வேண்டும் என ஈரானின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் ஆராக்கி தெரிவித்தள்ளார். அவர் அமெரிக்காவின் இத்தீர்மானம் மிகப் பெரும் மூலோபாயத் தவறு என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈரான் அரசாங்கத்தின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புச் சபை பூகோள பயங்கரவாதப் பிரச்சாரத்தை முன்னெடுக்கும் ஒரு அமைப்பு என ட்ரம்ப் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

About the author

Administrator

1 Comment

  • தயவுசெய்து, ஒவ்வொரு தற்கொலை குண்டுதாரி பெயரையும், தொடர்புடைய கட்டிடத்தையும் (மற்றும் உணவகம்) பாதுகாப்புக்கு ஆதரவாக பிரசுரிக்கவும். தயவு செய்து, ஒவ்வொரு கட்டிடத்தின் இறுதிப் படத்திலும் சிவப்பு வட்டம் வரையவும். தயவு செய்து, ஒவ்வொரு கொலைகாரனின் முகத்தின் புகைப்படத்தையும் சேர்க்கவும். ஷாங்க்ரி லா ஹோட்டலில் வெடித்த இரண்டு பயங்கரவாதிகளின் பெயர்கள் மிக முக்கியமான தகவல்கள். நன்றி.

Leave a Comment