சர்வதேசம்

ஈஸ்டர் தாக்குதல்தாரிகள் தொடர்பான ஏழு இடங்கள் இந்தியாவில் சோதனை

ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும் ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்பான குண்டுதாரிகளுக்கும் இடையில் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் ஏழு இடங்களை இந்திய தேசிய புலனாய்வுப் பிரிவு (NIA) தமிழ் நாட்டின் கோயம்புத்தூர் பிரதேசத்தில் சோதனையிட்டது. இவர்களுக்கிடையிலான சமூக ஊடகத் தொடர்புகள் பற்றி அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாக இந்திய புலனாய்வுத் துறை தெரிவிக்கின்றது.

சத்தாம், அக்பர், அக்ரம், அஸாருதீன், அபூபக்ர், ஹிதாயதுல்லாஹ், ஸஹீம்ஷா ஆகியோருடைய வீடுகளில் கணினி மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் சோதனையிடப்பட்டன. இவர்கள் தடைசெய்யப்பட்ட தேசிய தவ்ஹீத் ஜமாஅத்துடைய பேஸ்புக் பக்கத்தைப் பின்தொடர்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய புலனாய்வுப் பிரிவின் குழுவொன்று ஐஎஸ் தீவிரவாதக் குழுவுடன் இலங்கைக்குள்ள தொடர்புகள் பற்றி விசாரிப்பதற்காக சில நாட்களுக்கு முன்னர் விஜயம் செய்திருந்தது.

About the author

Administrator

Leave a Comment