அரசியல் உள்நாட்டு செய்திகள்

முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள்: சர்வதேசத்தின் கண்டனம் வலுக்கிறது.

இலங்கையில் முஸ்லிம் சமூகத்தின் மீது திணிக்கப்படும் அரசியல், மத அழுத்தங்களை ஐரோப்பிய யூனியன் ஆழமாக அவதானித்து வருகிறது என ஐரோப்பிய யூனியனின் தூதுக் குழுவினர் தெரிவித்துள்ளனர். ஊடகங்களில் வெளியாகும் அடிப்படையற்ற திட்டமிடப்பட்ட குற்றச்சாட்டுக்கள் வெறுப்பை அதிகரிக்கச் செய்யும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த அறிக்கையை பிரான்ஸ், ஜேர்மன், இத்தாலி, நெதர்லாந்து, ருமேனியா, இங்கிலாந்து, நோர்வே, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் இணைந்து வெளியிட்டிருந்தன.

இலங்கையின் எந்த அரசாங்கமும் மனித உரிமைகளை மதித்துச் செயல்பட வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலின் கடப்பாடுகளை ஏற்று நடக்க வேண்டும் எனவும் அமெரிக்க எதிர்பார்ப்பதாக சிரேஷ்ட அமெரிக்க அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

About the author

Administrator

Leave a Comment