உள்நாட்டு செய்திகள்

ஈஸ்டர் குண்டுதாரி அறபுக் கல்லூரி ஆரம்பிக்கத் திட்டமிட்டிருந்தார்

கிங்ஸ்பரி ஹோட்டலில் குண்டுத் தாக்குதல் நடத்திய அப்துல்லாஹ் எனும் அஸாம் முஹம்மத் முபாரக்கின் கொலன்னாவ வீட்டிலிருந்து அறபுக் கல்லூரியொன்றை ஆரம்பிப்பதற்கான ஆவணங்கள் கண்டெடுக்கப்பட்டதாக CID கோட்டை நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது.

அறபுக் கல்லூரி ஆரம்பிப்பதற்கான விண்ணப்பப் படிவத்தில் செயலாளராகக் கையொப்பமிட்டுள்ள இப்றா லெப்பை முஹம்மத் ஸாஜித்தும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக CID யினர் தெரிவிக்கின்றனர். அப்துல்லாஹ் 2014 ஆம் ஆண்டிலிருந்து தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தின் முக்கிய அங்கத்தவர் என்பது தெரியவந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பில் வெலிகாமம் தெனிபிடியவைச் சேர்ந்த அமீர் ஹம்ஸா முஹம்மத் வக்கார் யூனுஸ் என்பவரும் ஆயுதப் பயிற்சி பெற்றதாகச் சொல்லப்படும் காத்தான்குடியைச் சேர்ந்த ஸைனுல் ஆப்தீன் முஹம்மத் ஜெஸீல் என்பவரும் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

About the author

Administrator

Leave a Comment