உள்நாட்டு செய்திகள்

இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிராக வியாபாரத்திலும் போட்டி வேண்டும்

Written by Administrator

தமிழ் சிங்கள இனத்தவர்கள் வியாபார மற்றும் உற்பத்தித் துறையில் முன்னிலை வகிக்க வேண்டும். தேசிய உற்பத்திகளுக்கு முன்னுரிமை கொடுத்து இறக்குமதிகளை இரண்டாம் தரமாக்குவதற்கு தமிழ் சிங்கள சமூகம் ஒன்றுபட வேண்டும். இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் வியாபாரத் துறையிலும் போட்டித் தன்மை காணப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரர் யாழ்ப்பாணத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்.

இந்து, பௌத்த சமயத்தவர்கள் ஒன்றுபட வேண்டும். இவ்விரு மதங்களுக்கும் இடையில் சடங்கு சம்பிரதாயங்களில் எந்த வேறுபாடும் கிடையாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் தீர்வு, வடக்கு கிழக்கு பிரச்சினை தொடர்பில் மட்டும் வெறும் பேச்சளவில் கருத்துரைத்தார்கள். தேசிய பிரச்சினைகளுக்குக் குரல் கொடுக்கவில்லை. கிழக்கு மாகாணத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் முறையற்ற விதத்தில் செயற்பட்டமைக்கு கூட்டமைப்பும் ஒருவகையில் பொறுப்புக் கூற வேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு பிரதேசங்களில் ஹிஸ்புல்லாஹ் போன்ற அரசியல்வாதிகள் பாடசாலைகளுக்கு முஸ்லிம் ஆசிரியர்களையே பெரும்பாலும் நியமித்திருக்கிறார். ஆசிரியர் நியமனத்தின் ஊடாக ஹிஸ்புல்லாஹ் மட்டக்களப்பு தமிழ் சமூகத்திற்கு பாரிய துரோகமிழைத்துள்ளார் எனவும் கூறினார்.

About the author

Administrator

Leave a Comment