Uncategorized உலக செய்திகள் சர்வதேசம்

தலைமுடி விற்பனை மூலம் இந்தியாவுக்கு ஆண்டுக்கு 120 கோடி வருமானம்

Written by Administrator

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் காணிக்கை தலைமுடியை விற்பதன் மூலம் ஆண்டுக்கு 120 கோடி இந்திய ரூபாய் வருமானம் கிடைப்பதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பக்தர்களிடமிருந்து காணிக்கையாகச் சேகரிக்கப்படும் தலைமுடி தினமும் 200 கிலோ முதல் 900 கிலோ வரை கலஞ்சியசாலைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இங்கு தலைமுடி நீளத்தின் அடிப்படையில் பிரித்து வைக்கப்பட்டு தரம் பிரிக்கப்படுகின்றன. 27 அங்குலமுள்ள முதல் ரக தலைமுடி ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளால் ஏலத்தில் எடுக்கப்படுகின்றன. 19 – 26 அங்குலம் வரையான இரண்டாம் ரக தலைமுடி சீன, நைஜீரிய நாடுகளால் வாங்கப்படுகின்றன.

About the author

Administrator

Leave a Comment