அரசியல் உள்நாட்டு செய்திகள்

சிறுபான்மை தமக்குள் முரண்டு பிடித்தால் பெரும்பான்மையிடம் எதைப் பெறுவது?

Written by Administrator

கல்முனைப் பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்துவதால் இஸ்லாமிய மக்களுக்கோ அவர்களது நிலத்திற்கோ எதுவித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். இந்த விடயத்தில் முஸ்லிம் தலைமைகள் பொறுப்புடனும் நிதானத்துடனும் செயற்பட்டு இவ்விடயத்திற்கு பூரண ஒத்துழைப்பு நல்க வேண்டும் என தமிழ் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்த சங்கரி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கடந்த மாகாண சபையில் 11 உறுப்பினர்களைக் கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 6 உறுப்பினர்களைக் கொண்டிருந்த சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுத்தபோது கல்முனை பிரதேச செயலகத்தின் தரமுயர்த்துதலை பேரம் பேசியிருக்கலாம். அல்லது நல்லாட்சி அரசு எதிர்க்கட்சிப் பதவியைப் பெற்றுக் கொண்ட போதாவது பேரம் பேசியிருக்கலாம். இந்த வாய்ப்பையெல்லாம் விட்டு விடடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போதும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள விரும்பத்தாகத சூழ்நிலையை அனைவரும் உணர்ந்து விட்டுக் கொடுப்புகளை மேற்கொண்டு இந்த விடயத்தில் அரசியல் ஆதாயம் தேடி, மக்களை அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்லாமல் நிதானமாக நடந்துகொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் தமிழர் விடுதலைக் கூட்டணி வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதாக இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

About the author

Administrator

Leave a Comment