அரசியல் உள்நாட்டு செய்திகள்

மலையக மக்களுக்கு 26 மில்லியன் செலவில் 25 வீடுகள் கையளிப்பு

Written by Administrator

மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் ஊடாக லிந்துல ஹின்ட் போல்ட் தோட்டம் ஆக்ரா டிவிஷனில் 26 மில்லியன் ரூபா செலவில் தலா 7 பேர்ச் காணியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 25 தனி வீடுகள் அமைச்சர் பி. திகாம்பரம் அவர்களினால் பயனாளிகளுக்குக் கையளிக்கப்பட்டது. இதன்போது உரையாற்றிய அமைச்சர் மலையக மக்களுக்கு இதுவரை நாம் நிர்மாணித்துக் கொடுத்துள்ள வீடுகளில் 5000 வீடுகளுக்கு காணி உறுதிப் பத்திரங்களை வழங்கியுள்ளோம்.

இந்நிலையில் மலையக மக்களுக்கு 99 வருட குத்தகை அடிப்படையில் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற முன்மொழிவை பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சரும் இராஜாங்க அமைச்சரும் கொண்டு வந்துள்ளார்கள். எமது மக்களுக்கு நிபந்தனை அடிப்படையில் காணி உறுதிகள் தேவையில்லை. இந்நாட்டில் சகலருக்கும் வழங்கப்படுவது போல காணி அமைச்சின் ஊடாக ஒரே மாதிரியான உறுதிப் பத்திரிரங்கள் வழங்கப்பட வேண்டும் என் தெரிவித்தார்.

About the author

Administrator

Leave a Comment