அரசியல் உள்நாட்டு செய்திகள்

இராணுவத்துடனான அமெரிக்க ஒப்பந்தத்திற்கு கடும் எதிர்ப்பு

Written by Administrator

அமெரிக்கா அவசரமாக இலங்கை மீது கவனம் செலுத்தியுள்ளது. இராணுவம் தொடர்பாக அமெரிக்கா இலங்கையுடன் செய்துகொள்ளவிருந்த ஒப்பந்தத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டமையினால் அமெரிக்க இராஜாங்க செயலாளர் இலங்கைக்கான விஜயத்தை ரத்து செய்து விட்டார். அமெரிக்கா இவ்வாறு இலங்கை மீது திடீரென அவதானம் செலுத்தியமைக்கான காரணம் கண்டறியப்பட வேண்டும் என இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

அரசாங்கம் அமெரிக்காவுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் சுமார் 83 பக்கங்களைக் கொண்டது. அதில் என்ன இருக்கின்றது என்பது ஜனாதிபதிக்கும் தெரியாது. இந்த ஒப்பந்தம் ஏன் வெளிப்படுத்தப்படவில்லை என்று நாம் அரசாங்கத்தைக் கேட்கிறோம். வெளிப்படுத்தப்படவில்லை என்பதை விட வெளிப்படுத்த முடியாது என்பது உண்மையாகும். நாட்டின் சுயாதீனத் தன்மை காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது இதற்கான காரணமாகும்.

இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமெரிக்கர்கள் குடியேறியுள்ளனர். அதற்கான அவர்களுக்கு இப்பல்வேறு வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பலமிக்க நாடுகள் இலங்கையை ஆக்கிரமிக்கத் தொடங்கினால் அவர்களிடம் நாட்டைக் கொடுத்து விட்டு நாம் வெளியேற வேண்டிய நிலமை ஏற்படும்.

அமெரிக்கா மாத்திரமல்ல, தற்போது சீனா, இந்தியா போன்ற நாடுகளும் இலங்கையை ஆக்கிரமிக்க ஆரம்பித்துள்ளன. அதற்கான வழியையும் நாமே ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம் இந்த நிலமை தொடர்ந்தால் நாம் பழைய நிலைக்கே செல்ல வேண்டி வரும் எனவும் தெரிவித்தார்.

About the author

Administrator

Leave a Comment