அரசியல் உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதியையும் அரசையும் விமர்சிக்கும் சமூக ஊடகங்கள் முடக்கம்

Written by Administrator

ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் விமர்சிக்கும் கருத்துக்களைப் பதிவிடுபவர்களின் தனிப்பட்ட பேஸ்புக் கணக்குகள் மற்றும் யுடியூபை மையமாகக் கொண்டு இயங்கும் செய்தி ஊடகங்களின் செயற்பாடுகள் போன்றவற்றுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கடந்த சில வாரங்களாக பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமக்கு பலரிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அதனை ஆராய்ந்து பார்த்திலிருந்து முடக்கப்பட்ட, சைபர் தாக்குதலுக்கு உள்ளான பேஸ் புக் கணக்குகள் ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் விமர்சித்தவை என தெரியவந்துள்ளது என தேசிய ஒற்றுமைக்கான சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

சைபர் தாக்குதல்களைத் தொடுக்கும் வகையில் நிறுவப்பட்டுள்ள அரச நிறுவனம் தற்போது அரசியல் செல்வாக்கின் அடிப்படையிலேயே செயற்பட்டு வருகிறது. அதேபோல பேஸ் புக் நிறுவனத்தில் இணைந்து பணியாற்றும் பக்கச்சார்பாக மொழிபெயர்ப்புப் பணியாளர்களின் தவறான புரிதலினால் இவ்வாறு பலரி்ன் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளமையை அறிய முடிகிறது.

2015 இல் முன்னைய அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான பிரசாரங்களை இந்த சமூக வலைத் தளங்களினூடாக முன்னெடுத்த இலங்கை யுவதிகளுக்கு இலவச வைபை மற்றும் கூகுல் பெலூன் வசதிகளை வழங்குவதாக உறுதியளித்த ந்ல்லாட்சி அரசாங்கம் இத்தகைய செயற்பாடுகளின் ஊடாக சமூக வலைத் தளங்களில் காணப்படும் சுதந்திரத் தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளமை குறித்து எமது கடுமையான கண்டனத்தை வெளியிடுகிறோம். ஷ

நாட்டு மக்களின் அப்பிப்பிராயங்களை மாற்றியமைத்து அரசாங்கத்துக்குச் சாதகமான பின்னணியொன்றை உருவாக்கிக் கொள்துடன் எதிரணியின் கொள்கைகளைப் பின்தள்ளும் வகையில் அரசாங்கம் பயன்படுத்திக் கொள்வது குறித்து பேஸ் புக் நிறுவனம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்துள்ளது.

About the author

Administrator

Leave a Comment