அரசியல் உள்நாட்டு செய்திகள்

கல்முனை உன்னாவிரதத்திற்கு எதிரான முஸ்லிம் தரப்பின் வழக்கு செப்.09 இல்

Written by Administrator

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி பௌத்த பிக்குகளுடன் இணைந்து தமிழ்த் தரப்பினர் மேற்கொண்டு உன்னாவிரத்திற்கு எதிராக கல்முனை பொலிஸார் தாக்குதல் செய்த வழக்கு செப்.09 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் தரப்பினர் கல்முனை பொலிஸாருக்குக் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் உன்னாவிரதிகளுக்கு எதிராக பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். முதல்நாள் உன்னாரவிரதம் இருந்த கல்முனை மாநாகர சபை உறுப்பினர் சந்திர சேகரன் ராஜன் ரன்முத்துகல சங்க ரத்ன தேரர், சிவ ஸ்ரீ சச்சிதானந்த குருக்கல், மாநகர சபை உறுப்பினர் அ. விஜயரத்னம் ஆகியோர் எதிராளிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

பொலிஸ் தரப்பில் ஆஜரான பொலிஸ் அதிகாரியிடம் எதிராளிகளிடம் வாக்கு மூலம் பெறப்பட்டதா என நீதிபதி வினவியபோது, இல்லை என்று பதிலளித்த அவர், உன்னாவிரதத்தை விட்டு அவர்கள் அகன்று விட்டதாகவும் கூறினர். வாக்கு மூலத்துடன் செப். 09 ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு நீதிபதி ஐ.எல்.எம். றிஸ்வான் உத்தரவிட்டார்.

About the author

Administrator

Leave a Comment