இலங்கை நெய்னார் சமூக நல காப்பகம் சார்பில் மீண்டும் விருது வென்ற இம்ரான் நெய்னார்

0
33

கொழும்பு – மருதானை டவர் மண்டபத்தில் அண்மையில் (ஆகஸ்ட் 25) கலாபூஷணம் எம்.சி. மொகமட் அலி அரங்கேற்றிய ‘வசந்த ராகங்கள்’ நிகழ்ச்சியின்போது இலங்கை நெய்னார் சமூக நல காப்பகம் ஆற்றிவரும் சமூக சேவைகளை கௌரவிக்கும் முகமாக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. 

இந்த விருதினை இலங்கை நெய்னார் சமூக நல காப்பகத்தின் தலைவரும், சமூக ஆர்வலருமான இம்ரான் நெய்னார் பெற்றுக் கொண்டார்.

இவ்விழாவின் போது, தமிழ்மனி மானா மக்கீன், கலைவாதி கலீல், கலாபூஷணம் நாகூர் கனி, கே.எம். ஜவாஹிர், அல்ஹாஜ் ரஷீத் எம். ஹபீல், கே. மணி, மஹதி ஹசன் இப்ராஹீம், யாழ் அசீம், இலக்கிய சுடர் ஏ.ஜே.எம். நிலாம், கலாபூஷணம் எம்.எஸ்.எம். ஜின்னாஹ், கலாபூஷணம் டோனி ஹசன், அஸ்வான் ஷக்காப் மௌலானா, ஏ.எல்.எம். நவாஸ், எஸ்.யூ.எம். லாபீர், எஸ்.எம்.எஸ். இத்ரீஸ் ஆகிய கலைஞர்கள் எழுத்தாளர்கள் சிரேஸ்ட அறிவிப்பாளர்கள் ஆகியோருக்கும் விருது வழங்கி வைக்கப்பட்டது.

இவ்விருது வழங்கும் நிகழ்வில் கொழும்பு மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அவர்களும், கொழும்பு மாநகர சபை பிரதி மேயர் இக்பால் அவர்களும் கலந்துகொண்டு விருதுகளை வழங்கி வைத்தனர்.
அத்துடன், செய்யத். ஓ. மௌலானா, அப்துல் கையூம், அலி அக்பர், இர்ஷாத். ஏ. காதர், மபாஹிர் மௌலானா மற்றும் பல மாகாண, மாநகர சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டு வழங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியின்போது மருதமுனை கமால்தீன் மர்ஹூம் ஈ.எம்.எம். நாகூர் ஹனீபாவின் பாடல்களை இசைத்து பார்வையாளர்களைக் கவர்ந்தார். இவ்விழாவை அமீர்கான் தொகுத்து வழங்கினார்.

எம்.ரீ. ஹைதர் அலி