அரசியல் சமூகம் பிரதான செய்திகள்

அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்க முடியாது

Written by Administrator

அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை அதிகரிப்பதாக இருந்தால் 11,500 கோடி ரூபா மேலதிகமாகத் தேவைப்படுவதனால் தற்பொழுது அவர்களுக்கு சம்பள அதிகரிப்பைச் செய்ய முடியாது என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

சம்பளத்தைச் சீர்செய்யுமாறு இலங்கை நிர்வாக சேவையின் உத்தியோகத்தர் பலர் தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், நிர்வாக சேவை உட்பட 12 நிறைவேற்றுத் தரங்களைச் சேர்ந்த உத்தியோகத்தர்களுக்கு 15,000 முதல் 50,000 வரை மேலதிகக் கொடுப்பனவு வழங்குவதற்கு அனுமதி கோரி அரச நிர்வாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அமைச்சரவைப் பத்திரமொன்றை முன்வைத்திருந்தார்.

அதேபோல புகையிர ஊழியர்களின் சம்பளத்தை சீர்செய்யுமாறு போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவும் அமைச்சரவைப் பத்திரமொன்றை முன்வைத்திருந்தார்.

இவை தொடர்பில் கருத்து வெளியிட்ட நிதியமைச்சர், அரச ஊழியர்களுக்கான சம்பளத்துக்கென 80,000 கோடி ரூபா செலவாவதாகவும் இதற்கு மேல் அதனை அதிகரிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

About the author

Administrator

Leave a Comment