உலக செய்திகள் சர்வதேசம்

மாலாவி ஜனாதிபதி தேர்தல் குளறுபடிகளை நிராகரிக்கிறார்

Written by Administrator

சமீபத்தில் மாலாவியின் ஜனாதிபதியாகத் தெரிவான பீட்டர் முதாரிக்கா தேர்தலின் பொழுது நிகழ்ந்த வாக்கு மோசடிகள் மற்றும் ஆள்மாறாட்டங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ளார். 2014 ஆம் ஆண்டிலிருந்து மிகச் சிறிய ஆபிரிக்க நாடான மாலாவியின் ஜனாதிபதியாக பீட்டர் முதாரிக்கா இருந்து வருகின்றார்.

சட்டத்தரணியாகவும் பேராசிரியராகவும் விளங்கும் முதாரிக்கா, இரண்டாவது தடவையும் இவ்வருட ஆரம்பத்தில் ஜனாதிபதித் தேர்தலில் குதித்து வெற்றி பெற்றார். ஆயினும் தேர்தல் வாக்கு மோசடி நடந்தே முதாரிக்கா ஜனாதிபதி ஆனார் என எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. இதனால் உயர் நீதிமன்றம் தேர்தல் முடிவுகள் வெளியிடபப்படுவதை தற்காலிகமாக நிறுத்தியிருந்தது.

ஏற்கனவே தேர்தல் ஆணைக்குழு 79 வயதான பீட்டர் முதாரிக்காவே தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவித்திருந்தபோதும் தேர்தல் ஆணைக்குழுவின் முடிவை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சியினரின் ஆர்ப்பாட்டத்தைக் கலைப்பதற்கு பொலிசார் கண்ணீர் தாரையையும் கண்ணீர்ப் புகையையும் பயன்படுத்தியமை நாட்டில் மிகப் பெரிய அரசியல் கொந்தளிப்பைத் தோற்றுவித்தது.

தற்போது நீதிமன்ற ஆணையின்படி முதாரிக்கா இரண்டாவது பதவிக் காலத்தை ஆரம்பித்துள்ளபோதும் ஊழல், வறுமை மற்றும் சுகாதாரத் துறை தொடர்பான பல்வேறு சவால்களை அவர் எதிர்நோக்கியிருப்பதாகக் கூறப்படுகின்றது.

சமீபத்தில் அல் ஜஸீராவின் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், அவரது அரசாங்கத்திற்கு எதிராக உள்ள அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் மறுத்துள்ளார்.

About the author

Administrator

Leave a Comment