உலக செய்திகள் சர்வதேசம்

சவூதியின் அவசர GCC கூட்டத்தில் கட்டார் பங்கேற்பு

Written by Administrator

பயங்கரவாதத்தை எதிர்த்தல் மற்றும் பாதுகாப்புக் கூட்டுறவு என்பன தொடர்பாக அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்ட வளைகுடா கூட்டமைப்பு சபையின் விசேட கூட்டத்தில் கட்டார் பங்கேற்றது. இக்கூட்டம் சவூதி அறேபியாவில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் எந்தவொரு பாதுகாப்பு அச்சுறுத்தலையும் பயங்கரவாதத் தாக்குதல்களையும் எதிர்கொள்வதற்கு வளைகுடா கூட்டமைப்பு சபையின் இராணுவம் தயாரா உள்ளது என்று கூட்டாக அறிக்கை விட்டுள்ளன.

ரியாதில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கட்டார் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கலந்துகொண்டமை முக்கிய அம்சமாகும். வளைகுடா கூட்டமைப்பு சபையில் இடம்பெறும் அங்கத்துவ நாடொன்றின் மீது பிற நாடொன்று தாக்குதல் மேற்கொள்ளும்போது அதைக் கூட்டாக எதிர்கொள்வதற்குத் தாம் தயாராக உள்ளோம் என இந்நாடுகள் அறிவித்துள்ளன.

About the author

Administrator

Leave a Comment