அரசியல் உள்நாட்டு செய்திகள் பிரதான செய்திகள்

63 முஸ்லிம் பயங்கரவாதிகளுக்கும் நிதி உதவி செய்யத் தடை

Written by Administrator

பயங்கரவாதத்துடன் தொடர்புபட்ட செயற்பாடுகளில் ஈடுபட்டதற்காகவும், பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளித்தார்கள் என்பதற்காகவும் 62 முஸ்லிம் பெயர்களை பெயர்குறிக்கப்பட்ட ஆட்களின் நிரலில் சேர்க்கும் வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 09 ஆம் திகதிய 2140/16 ஆம் இலக்க அதிவிஷேட வர்த்தமானியிலேயே இவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. 2012 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் சபை ஒழுங்குவிதிகளின் படி ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் 1267 ஆவது ஒழுங்குவிதியை நடைமுறைப்படுத்துவற்காக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஐநா பாதுகாப்புச் சபையின் ஒழுங்குவிதிகளுக்கு அமைய, தடை செய்யப்பட்ட தாலிபான், அல்கைதா, ஐஎஸ் அமைப்புக்களுடன் தொடர்புடையவர்களாக நிரூபணமாகும் நபர்கள் பெயர்குறிப்பிடப்பட்ட நபர்களாக அல்லது அமைப்புக்களாக (Designated Individuals or Entities) அறிவிக்கப்படுவர். அதனைத் தொடர்ந்து இவர்களுடைய நிதி, சொத்துக்கள் மற்றும் பொருளாதார மூலங்களை முடக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதேபோல இவர்களுக்கு நிதி வழங்குதல், சொத்துக்கள் மற்றும் பொருளாதார மூலங்களை ஏற்படுத்திக் கொடுக்கும் நபர்களும் அமைப்புக்களும் வர்த்தகங்களும் நிறுவனங்களும் பயங்கரவாதத்துக்கு உதவியதாக கணிக்கப்படுவர்.

About the author

Administrator

Leave a Comment