உள்நாட்டு செய்திகள் சமூகம் பிரதான செய்திகள்

திகன அறிக்கையை வெளியிடாததேன் ?

Written by Administrator

2018 மார்ச் மாதம் திகனவில் கட்டவிழ்த்து விடப்பட்ட முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்குக் கிடைத்த முறைப்பாடுகளுக்கமைய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பிலான அறிக்கையை மனித உரிமைகள் ஆணைக்குழு இதுவரை வெளியிடாமல் இருக்கிறது.

இந்தத் தாக்குதல்களின் போது அரச படைகள் இனவாதிகளுக்குச் சார்பாக நின்று முஸ்லிம் சமூகத்தின் மீது அத்துமீறியமைக்கான பல சான்றுகளை தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் சேகரித்துள்ளனர். இந்தத் தாக்குதல்களின் பின்னணியில் அரசாங்கம் இருந்திருப்பதாக அவர்கள் சந்தேகிக்கின்றனர். இதனால் அரசாங்கத்திடம் முறையிடுவதால் பயனில்லை என்ற நிலையில் அவர்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்திருந்தனர். சம்பவம் நடந்து ஒரு வருடம் கடந்த நிலையில் மீள்பார்வை இது தொடர்பில் வினவியபோது, மாவனல்லை புத்தர் சிலை உடைப்பு விவகாரத்தையும் சேர்த்து அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டது.

தற்பொழுது ஒன்றரை வருடங்கள் கடந்தும் இந்த அறிக்கை வெளிவராதிருப்பது தொடர்பில் விசாரித்த போது ஈஸ்டர் தாக்குதல்களையும் சேர்த்து அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

About the author

Administrator

Leave a Comment