பிரதான செய்திகள்

21/4 தாக்குதல் தொடர்பில் முறையிட 14 வரை சந்தர்ப்பம்: தாக்குதலின் பின்னரான இனவாத வன்முறைகளையும் முறையிட வாய்ப்பு

Written by Administrator

ஈஸ்டர் தாக்குதலின் பின்புலம் தொடர்ந்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவிடம் பொதுமக்கள் தமது முறைப்பாடுகளை 14 ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும் என ஜனாதிபதி விசாரணைக் குழுவின் செயலாளர் எச்.எம்.பி.பி.ஹேரத் அறிவித்துள்ளார்.

பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களை கைது செய்வதில், விசாரிப்பதில் நடைபெற்ற அதிகாரத் துஷ்பிரயோகம் அல்லது செய்யத் தவறிய விடயங்கள், இந்தப் பயங்கரவாதச் செயலுடன் சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் அமைப்புக்களை இனங்காட்டுதல், முன்கூட்டியே சட்ட நடவடிக்கை எடுக்கத் தவறிய அதிகாரிகளை இனங்காணுதல், தாக்குதலின் பின்னர் சொத்துக்கள் மற்றும் நபர்களுக்கு சேதங்களை விளைவித்து, அதன் மூலம் பொதுமக்கள் மத்தியில் அமைதியின்மையை ஏற்படுத்திய பொது ஆர்ப்பாட்டங்கள், நாசகாரச் செயல்களுடன் சம்பந்தப்பட்ட ஆட்கள் மற்றும் நபர்களை இனங்காணுதல், நாட்டில் இனவாத, மதவாத குழப்பங்களை ஏற்படுத்துவதற்கு உடந்தையாய் இருநதவர்களை இனங்காணுதல், ஈஸ்டர் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு நிதி மற்றும் ஏனைய உதவிகளைச் செய்தவர்களை இனங்காணுதல் போன்ற விடயங்கள் தொடர்பில் இந்த ஆணைக் குழுவிடம் முறைப்பாடு செய்ய முடியும்.

முறைப்பாடுகளை பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டிய முகவரி – 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற குண்டு வெடிப்புகள் தொடர்பாக புலனாய்வு செய்து விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கையிடுதல் அல்லது தேவையான நடவடிக்கைகளை எடுத்தலுக்கான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, முதலாம் மாடி, புளொக் இல 05, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம், பௌத்தாலோக்க மாவத்த, கொழும்பு 07. தொலைபேசி 0112 669135, தொலைநகல் 0112 677673, மின்னஞ்சல் iiirpci@gmail.com

About the author

Administrator

Leave a Comment