அரசியல் உள்நாட்டு செய்திகள்

காவியைக் களைந்து விட்டு சண்டித்தனம் காட்டினால் பதிலடி கொடுப்போம்

Written by Administrator

சைவ சித்தாந்தத்தின் அடிப்படையில் காவி உடை அணிவது புனிதமானது. ஞானசார தேரர் காவி உடையை களைந்து விட்டு சண்டித்தனத்தைக் காட்டினால் நாங்களும் அதற்கான பதிலடி கொடுப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சவால் விடுத்துள்ளார்.

முல்லைத்தீவு விகாராதிபதியின் பூதவுடலை தகனம் செய்வது தொடர்பில் நீதிமன்றம் விடுத்த கட்டளையை அவமதித்த ஞானசார தேரரை கைது செய்யுமாறு வலியுறுத்தி யாழ் நகரில் நடைபெற்ற போராட்டத்தின் பின்னரே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.

ஆயுதப் போராட்டம் மௌனித்த பின்னர் தமிழ் மக்கள் அநாதரவாக விடப்பட்டார்கள் என சிங்கள பௌத்த பிக்குகள் நினைக்கிறார்கள் போலுள்ளது. ஒருசில பௌத்த மதகுருமார் காவி உடை அணிந்து தமிழ் இனத்தை மிக மோசமாக நடத்த முயற்சிக்கின்றனர். எம்மைப் பொறுத்தமட்டில் காவி உடை புனிதமானது. காவி உடையைக் களைந்து விட்டு ஞானசார தேரர் சண்டித்தனத்தைக் காட்டட்டும் பார்க்கலாம் என அவர் சூளுரைத்தார்.

About the author

Administrator

Leave a Comment