அரசியல் உள்நாட்டு செய்திகள்

ஒரே நாடு ஒரே சட்டம் என்பது கவனத்தில் எடுக்கப்பட்டுள்ளது

Written by Administrator

ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற விவகாரம் தொடர்பில் ஜேவிபியின் அங்கத்தவர்களுக்குத் தெளிவுபடுத்தி இருக்கிறோம். இது தொடர்பில் அவர்கள் மிகுநத புரிந்துணர்வுடன் இருக்கின்றார்கள் என தேசிய மக்கள் சக்தியின் பங்காளியான நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் சிராஜ் மஷ்ஹூர் தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான ஜேவிபியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கொள்கையில் இருக்கையில், முஸ்லிம் சமூகத்துக்குப் பாதகமான இந்த நிலைப்பாடு தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் பங்காளியான நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளரிடம் மீள்பார்வை கேள்வி எழுப்பிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் நாங்கள் அனுர குமார திசாநாயக்கவிடம் எடுத்துச் சொல்லியிருக்கிறோம். அவர் இதற்கு இணங்கி வரக் கூடிய நிலையில் இருக்கிறார். பகிரங்க ஆவணங்களில் அவர்கள் இந்தக் கருத்தை எப்படி வெளியிடப் போகிறார்கள் என்பது தெரியாது. இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்துடனும் கலந்துரையாடியிருக்கிறோம் எனவும் அவர் தெரிவித்தார்.

About the author

Administrator

Leave a Comment