அரசியல் உள்நாட்டு செய்திகள்

சாய்ந்தமருது பள்ளிவாசலின் அரசியல் தொடர்பில் விசனம்

Written by Administrator

சாய்ந்தமருதுக்கான தனியான நகர சபைக் கோரிக்கையை முன்வைத்து சாய்ந்தமருது பள்ளிவாசல் பொதுஜன பெரமுன வேட்பாளர் கோதாபய ராஜபக்ஷவை ஆதரிக்க முடிவெடுத்ததில் இருந்து அந்தப் பள்ளிவாசல் அரசியல் நடவடிக்கைகளுக்காகப் பாவிக்கப்பட்டு வருவதாக முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக கபே அமைப்பின் பதில் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மக்கீன் ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

பள்ளிவாசல்களில் நடைபெறும் குத்பாக்கள் , உரைகள் எதுவும் மத வழிபாட்டுத் தலங்கள் தேர்தல் பிரச்சாரத்துக்காகப் பயன்படுத்தப்படக் கூடாது என்ற தேர்தல் விதியை மீறும் வகையில் அமைதல் கூடாது. ஆனாலும் சாய்ந்தமருது பள்ளிவாசல் எடுத்துள்ள அரசியல் நிலைப்பாட்டைத் தொடர்ந்து இங்கு தேர்தல் விதிகள் மீறப்படுவதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சாய்ந்தமருதுக்கான தனியான நகர சபைக் கோரிக்கையை நல்லாட்சி அரசாங்கத்திடம் கோரிய போதும் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் தலையீட்டினால் அது கிடைக்காமல் போனதாகத் தெரிவித்திருந்த சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசல் தலைவர் வை.எம். ஹனிபா, இதனால் தமது இந்தக் கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்வதற்காக கோதாபய ராஜபக்ஷவை ஆதரிக்கத் தீர்மானித்திருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

About the author

Administrator

Leave a Comment