அரசியல் உள்நாட்டு செய்திகள்

வாக்களிப்பு நிலையத்தினுள் புர்காவைத் தவிர்ந்து கொள்க

Written by Administrator

முஸ்லிம் பெண்கள் வாக்களிக்க வரும்போது புர்கா அல்லது நிகாப் அணிந்து கொண்டு வர முடியும். வாக்களிப்பு நிலையத்தினுள் நுழையும் போது அவர்கள் தங்களது முகமூடியை நீக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். அவர்களிடம் வாக்குச் சீட்டை வழங்கும் போது அவர்களை அடையாளம் காணுவதற்காகவே இந்த வேண்டுகோள் விடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அடையாள அட்டையில் இருப்பவர் தான் வாக்களிக்க வந்திருக்கிறாரா என்பதனை நாங்கள் உறுதிப்படுத்த வேண்டியிருக்கிறது. தேர்தல் அதிகாரிகளுக்கு மட்டுமன்றி கட்சிகளின் பிரநிதிகளுக்கும் வாக்காளர்களை அடையாளம் காண வேண்டிய தேவை இருக்கிறது. புர்காவோ நிகாபோ ஒருவரது கலாச்சாரமாக இருக்கும் நிலையில் நாங்கள் அதனைத் தடுக்க முடியாது. ஆனாலும் உரிய வாக்காளருக்குத் தான் வாக்குச் சீட்டைக் கொடுக்கிறேனா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை தேர்தல் அதிகாரிகளுக்கு இருக்கிறது. இந்த நிலையில் யாராவது தங்களது முகமூடியை நீக்குவதற்கு மறுத்தால் அவர் வாக்களிப்பதில் இருந்து தவிர்க்கப்பட முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

About the author

Administrator

Leave a Comment