அரசியல் உள்நாட்டு செய்திகள்

வெளிநாட்டுக் கடனில் 15 வீதம் சீனாவிடமிருந்து

Written by Administrator

இலங்கையின் மத்திய அரசினதும் அரச நிறுவனங்களினதும் கடன்களைக் கூட்டிப் பார்க்கையில் இலங்கையின் மொத்த வெளிநாட்டுப் பொதுக் கடனில் 15 வீதம் சீனாவுக்குக் கொடுக்கப்பட வேண்டியது என சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.

ஜூன் 2019 இல் சீனாவிடம் இருந்து மத்திய அரசு பெற்ற கடன் 9.1 வீதமாக இருந்த போதிலும் அரச நிறுவனங்களுக்கு சீனா நேரடியாக வழங்கிய கடனினால் இந்த வீதம் அதிகரித்துள்ளது.

இலங்கையின் மொத்த வெளிநாட்டுப் பொதுக் கடனில் 12.7 வீதம் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும், 10 வீதம் ஜப்பானுக்கும் 9.5 வீதம் உலக வங்கிக்கும் உரியதாகும். இந்த வகையில் மொத்த வெளிநாட்டுப் பொதுக்கடனில் அதி கூடிய பங்கு சீனாவுக்குரியதாகும்.

About the author

Administrator

Leave a Comment