உலக செய்திகள் சர்வதேசம்

இஸ்ரேல் – பஹ்ரைன் பேச்சுவார்த்தை

Written by Administrator

பஹ்ரைன் வெளிவிவகார அமைச்சர் ஷேக் காலித் பின் அஹ்மத் அல் கலீபா மற்றும் இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் கார்ட்ஸ் ஆகியோர் கலந்துகொண்ட பேச்சுவார்த்தை அமெரிக்காவில் நடைபெற்றது. இரு நாடுகளினதும் வெளிவிவகார அமைச்சர்கள் பகிரங்கமாகக் கலந்துகொள்ளும் முதல் பேச்சுவார்த்தை இதுவாகும்.

1967 யுத்தத்திற்குப் பின்னர் இஸ்ரேலுடனான அனைத்து உறவுகளையும் துண்டித்துக் கொண்டிருந்த அறபு நாடுகளுள் பஹ்ரைனும் ஒன்றாகும். நீண்டகாலமாக அமெரிக்காவின் நட்பு நாடாக இருந்து வரும் பஹ்ரைன், தற்போது இஸ்ரேலுடன் வெளிப்படையான உறவுகளைப் பேணுவதற்கு முயற்சித்து வருவதாக அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.

ஐக்கிய அமெரிக்காவில் இடம்பெற்ற சமய சுதந்திர மாநாட்டின் பொழுதே இவர்கள் சந்தித்துள்ளனர். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ள இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர், நான் பகிரங்கமாக பஹ்ரைன் வெளிவிவகார அமைச்சரை சந்தித்தேன். வளைகுடா நாடுகளுடனான உறவைப் பலப்படுத்த நான் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என டுவிட்டரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the author

Administrator

Leave a Comment