உலக செய்திகள் சர்வதேசம்

எதியோப்பிய அணைக்கட்டுப் பிரச்சினைக்கு ட்ரம்ப் தீர்வு

Written by Administrator

எதியோப்பியா, எகிப்து மற்றும் சூடான் ஆகிய நாடுகளுக்கிடையிலான அணைக்கட்டு தொடர்பான பிணக்கைத் தீர்த்து வைப்பதற்குத் தான் தயார் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் எகிப்திய ஜனாதிபதி அப்துல் பத்தாஹ் ஸீஸியோடு கலந்துரையாடியுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

கடந்த வாரம் ட்ரம்ப் நிருவாகம் மூன்று நாட்டுப் பிரதிநிதிகளையும் வொஷிங்டன் வருமாறு அழைப்பு விடுத்திருந்ததாக எகிப்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார். எதியோப்பியாவின் அணைக்கட்டானது நைல் நதியிலிருந்து எகிப்து பெற்று வரும் நீரின் அளவைக் கட்டுப்படுத்தலாம் என ஸீஸி அச்சமடைந்துள்ளார். இவ்விடயத்தில் எதியோப்பியாவில் தங்கியிருக்க முடியாது என ஸீஸி ட்ரம்பிடம் தெரிவித்துள்ளார். இது எகிப்தின் பொருளாதாரத்தின் மீது பெரும் தாக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதியோப்பியா பெரும்பான்மை முஸ்லிம் நாடு என்ற போதும் ஆட்சியாளர்கள் கிறிஸ்தவர்கள். மகத்தான எதியோப்பிய மறுமலர்ச்சி அணைக்கட்டு என்று பெயரிடப்பட்டுள்ள நைல் நதி மீதான எதியோப்பிய அணைக்கட்டு இம்மூன்று நாடுகளுக்கிடையிலும் மிகப் பெரும் பிணக்கைத் தோற்றுவித்துள்ளது.

About the author

Administrator

Leave a Comment