உலக செய்திகள் சர்வதேசம்

அரம்கோவின் இலாபம் 7 வீதத்தால் குறைவு

Written by Administrator

சவூதியில் உள்ள உலகின் மிகப் பெரும் எண்ணெய் மற்றும் எரிவாயுக் கம்பனி எனக் கருதப்படும் அரம்கோவின் இலாபத் திரட்டு இவ்வருடம் 7 வீதத்தால் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 2018 இல் அரம்கோ ஈட்டிய நிகர இலாம் 111 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். இவ்வருடம் அது 7 வீதத்தால் குறைந்துள்ளது.

செப்டம்பரில் அரம்கோ 68.2 பில்லியன் அமெரிக்க டொலரை நிகர இலாபமாகப் பெற்றது. ஆனால், 2011 செப்டம்பரில் அந்நிறுவனம் பெற்ற இலாபம் 83.3 பில்லியன் டொலர்களாகும். தற்போது இக்கம்பனி பங்குகளை விற்பனை செய்வதற்கு முன்வந்துள்ளது. இளவரசர் முஹம்மத் பின் சல்மான் இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.

அரம்கோ கம்பனியின் பெறுமானம் 3 டிரில்லியன் டொலர்கள் என சவூதி அரசாங்கம் தெரிவித்துள்ள போதும் பொருளியல் நிபுணர்கள் அதன் மொத்தப் பெறுமதி 1.5 டிரில்லியன் டொல்களே என மதிப்பிட்டுள்ளனர்.

About the author

Administrator

Leave a Comment