உலக செய்திகள் சர்வதேசம்

சிரியாவின் அரசியலமைப்புச் சபை கூடுகின்றது

Written by Administrator

சிரியாவுக்கான புதிய அரசியலமைப்புச் சபையின் முதல் கூட்டம் 4-11-2019 அன்று நடைபெற்றது. இதில் 45 உறுப்பினர்கள் அங்கத்துவம் பெறுகின்றனர். அனைத்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளத் தக்க ஒரு புதிய அரசியலமைப்புத் திட்டத்தை வரைவதே இக்குழுவின் நோக்கமாகும்.

எனினும் சிரியாவின் எதிர்க்கட்சியினர் இக்குழுவின் செயற்பாட்டில் தமக்கு நம்பிக்கையில்லை என்று கூறியுள்ளனர். அரசியலமைப்புச் சபையின் பிரதித் தலைவரான ஹாதி அல் பஹ்ரா அனாதுலு செய்தி முகவர் நிறுவனத்திடம் இது குறித்து கருத்து வெளியிட்டபோது, “இரண்டு மணி நேரம் நாம் கலந்துரையாடினோம். அதில் சிரியாவுக்கான புதிய அரசியலமைப்புச் சபையில் வரைவதங்கான நிகழ்ச்சி நிரல் மற்றும் முறைமை குறித்துக் கலந்துரையாடினோம். குழுவில் அங்கத்துவம் வகிக்கும் பல்வேறு கட்சியினர் மத்தியில் இது தொடர்பான கருத்தொற்றுமை ஏற்பட்டது. இதற்கிடையில் சிரியாவுக்கான ஐ.நா.வின் விஷேட தூதுவர் பெடசன் சிரிய அரசியலமைப்புச் சபையின் முதல் கூட்டம் வெற்றிகரமானது எனத் தெரிவித்துள்ளார்.

150 சிரியர்கள் உட்கார்ந்து பரஸ்பரம் பேச்சுவார்த்தை நடத்தினர். அது தாக்கமுள்ளதாக இருந்தது என பெடசன் கூறினார்.

About the author

Administrator

Leave a Comment