உலக செய்திகள் சர்வதேசம்

பக்தாதியின் சகோதரியையும் கணவரையும் துருக்கியப் படை கைதுசெய்தது

Written by Administrator

அமெரிக்கப் படையினரால் கொல்லப்பட்ட ஐசிஸ் இயக்கத்தின் தலைவர் அபூபக்ர் பக்தாதியின் சகோதரியையும் கணவரையும் தாம் கைதுசெய்துள்ளதாக துருக்கியப் படைகள் தெரிவித்துள்ளன. இதன்மூலம் ஐசிஸ் பயங்கரவாத இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் பற்றிய தகவல்களை பெற வாய்ப்புள்ளது என்று துருக்கிய இராணுவம் தெரிவித்துள்ளது.

துருக்கிய இராணுவம் மேற்கொண்ட சுற்றிவளைப்பை அடுத்து, அபூபக்ர் பக்தாதயின் சகோதரி ரஸ்மியா அவாத் மற்றும் மருமகன் ஆகியோர் கொள்கலனிலிருந்து கைதுசெய்யப்பட்டனர். இவர்களை விசாரணை செய்வதன் மூலம் இப்பயங்கரவாத இயக்கத்தின் வலைப் பின்னல்கள் குறித்து தேவையான அனைத்துத் தகவல்களையும் பெற்றுக்கொள்ளலாம் என துருக்கி கூறுகின்றது.

சிரிய நகரான அஸாஸில் இருந்து இவர்கள் கைதுசெய்யப்பட்டனர். தற்போது தடுப்புக் காவலில் உள்ள இவர்களிடம் விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. ஒக்டோபரின் கடைசிப் பகுதியில் சிரியாவின் இத்லிப் மாகாணத்தில் பக்தாதியை கொலை செய்ததாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்தார். பக்தாதி அமெரிக்காவின் தயாரிப்பு என்று கூறப்படுகின்றது.

About the author

Administrator

Leave a Comment