உலக செய்திகள் சர்வதேசம்

பெய்ரூத்தில் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டம்

Written by Administrator

அரசாங்கம் சில பொருளாதார சலுகைகளையும் சீர்திருத்தங்களையும் அறிவித்துள்ளபோதும் லெபனானின் தலைநகர் பெய்ரூத்தில் மக்கள் ஆர்ப்பாட்டம் ஓயவில்லை. இரண்டு வாரங்களுக்கு மேலாக அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் அங்கு நீடிக்கின்றன. மக்கள் ஆர்ப்பாட்டத்தை அடுத்து லெபனான் பிரதமர் ஸஅத் அல் ஹரீரி பதவி விலகிய போதும் ஆர்ப்பாட்டங்கள் ஓயவில்லை.

பெய்ரூத்திலிருந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நாட்டின் பல பாகங்களுக்கும் பரவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் துரூசிகள் என லெபனான் சம்பந்தப்பட்ட பல்வேறு பிரிவினரும் அரச தரப்பு ஆர்ப்பாட்டத்தில் ஒன்றுபட்டுச் செயற்படுவதே அரசுக்கு பெரும் அதிர்ச்சியை வழங்கியுள்ளது.

ஏற்கனவே ஸ்திரமான அரசாங்கத்தைப் பாதுகாப்பது கடினமாக உள்ள நிலையில் மக்கள் கொந்தளிக்கத் தொடங்கியுள்ளமை ஆட்சியாளர்களளுக்கு பெரும் தலையிடியை ஏற்படுத்தியுள்ளது.

About the author

Administrator

Leave a Comment